Tamilnadu
”உயர் கல்வி வளர்ந்தது திமுக ஆட்சியில் தான்” : அமைச்சர் பொன்முடி பெருமிதம்!
விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு புதிய பள்ளியை திறந்து வைத்து விழா சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, " காமராஜர் ஆட்சி காலத்தில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு அரசு பள்ளி என்று கொண்டு வரப்பட்டது. ஆரம்ப கல்வியை வளர்த்தது காமராஜர் ஆட்சி என்றால் உயர் கல்வியை வளர்ந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில்தான்.
தற்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே உயர் கல்வி அதிகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. புதுமைப் பெண் திட்டம், நான்முதல்வன் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என கல்விக்காக நல்ல பல திட்டங்களை திராவிடமாடல் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!