Tamilnadu
”40க்கு 40 என்ற பிரம்மாண்ட வெற்றி” : தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி விறு விறுப்பாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி 40க்கு 40 தொகுதிகளிலும் அசத்தலான வெற்றியை வெற்றுள்ளது.
21 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் 10, சிபிஎம், சிபிஐ, விசிக 2 , மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
40க்கு 40 வெற்றி பெற்றதை அடுத்து சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் மீதமிருந்த 1 தொகுதிகளையும் சேர்த்து 40க்கு 40 என்ற பிரம்மாண்ட வெற்றியை அளித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த பிரமாண்ட வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன். பா.ஜ.கவின் கனவு தமிழ்நாட்டில் பலிக்கவில்லை. பிரதமர் மோடிக்கு எதிர்ப்பலைகள் உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவில் ரீதியான தாக்குதலை பாஜக மேற்கொண்டது. வெறுப்பு பிரச்சாரத்தால் மக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சித்தது. பாஜகவின் பண பலம், அதிகார துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட அராஜகங்களையும் மீறி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!