Tamilnadu
திண்டுக்கல் சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை காவலர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி கிராமம் திண்டுக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படைப் பிரிவு காவலர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், தாமரைப்பாடி கிராமம் திண்டுக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் இன்று (11.05.2024) பகல் 12.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடியைச் சேர்ந்த ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர் திரு.விக்னேஷ்குமார் (Grade-2 PC 260) வயது 32, சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனமும், நான்கு சக்கர சரக்கு வாகனம் ஒன்றும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த காவலர் விக்னேஷ்குமார் சிகச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன். இவ்விபத்தில் ஆயுதப்படைப் பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர் விக்னேஷ்குமார் உயிரிழந்துள்ளது தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
காவலர் விக்னேஷ்குமார் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட காவலரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!