Tamilnadu
73 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : ஊட்டிக்கே இந்த நிலையா ? - கொதிக்கும் கோடை வெப்பம் !
இந்தியாவில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதியநேரத்தில் தேவையின்றி வெளியேசெல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதோடு தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டத்தில் நாட்டிலேயே மூன்றாவது அதிகபட்ச வெப்ப நிலை அளவு பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மே இரண்டாம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மே இரண்டாம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், குளிர் பிரதேசமான ஊட்டியிலேயே இயல்பைவிட வெப்ப நிலை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஊட்டியில் நேற்று முன்தினம் 84.2 டிகிரி (29 செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகம் என்றும், இதற்கு முன்னர் 1969, 1986, 1993, 1995, 1996 ஆகிய ஆண்டுகளில் 80.6 டிகிரி முதல் 83.3 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 1951ம் ஆண்டு இந்த அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது என்றும், அதன் பின்னர் 73 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் வெப்பம் உச்சத்தை தொட்டிருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!