Tamilnadu
தேர்தல் ஆணையம் கல்லறைக்குள் சென்று விட்டதா? : மோடியின் பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்!
ராஜஸ்தானில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சித்து, இஸ்லாமிய மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்த மக்களவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் பா.ஜ.கவிற்கு சாதகமான முடிவுகள் இல்லாததன் வெளிப்பாடாகவே மக்கள் மத்தியில் மதரீதியான பிளவை ஏற்படுத்த மோடி முயற்சிப்பதாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
அதேபோல் பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? இல்லை, கல்லறைக்குள் சென்று விட்டதா??? என தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா?. இல்லை, கல்லறைக்குள் சென்று விட்டதா??
தேர்தல் பிரச்சாரங்களில்:
- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து "இது முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல் உள்ளது" எனக் கூறினார் மோடி.
- காஷ்மீரில் தாவர உணவு சாப்பிடுகின்ற மக்கள் மத்தியில் பேசும்போது மாமிச உணவு சாப்பிடுபவர்களை பற்றி கொச்சையாக விமர்சித்தார் மோடி.
- நேற்று ராஜஸ்தானில் "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி கூட மிஞ்சாது, உங்கள் சொத்துக்களையும், பொருட்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு பங்கு போட்டு கொடுத்து விடுவார்கள்" என்று கூறியுள்ளார் மோடி.
இதிலிருந்து மோடியின் பேச்சில் தோல்வி பயமும், விரக்தியும் வெளிப்படையாகவே தெரிகிறது. ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் ஓட்டுக்காக மக்களை பிரிக்கும் முயற்சியாக இப்படி மத வெறுப்புடன் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கே இழுக்கு" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!