Tamilnadu
”இந்தியாவுக்கு வெற்றிதான்” : ஜனநாயக கடமையை நிறைவேற்றிய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் வாக்குபதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலையிலேயே அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். அதேபோல் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் சினிமா பிரபலங்களும் தங்களது வாக்கினை வரிசையில் காத்திருந்து செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை SIET கல்லூரி வாக்குச்சாவடி மையத்தின் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”மக்களவைத் தேர்தலுக்கான 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் நமது ஜனநாயகத்தை காப்பாற்ற நமக்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கலாம். ஜனநாயகம் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் அனைவரும் சென்று வாக்களிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!