Tamilnadu
”தமிழ்நாடு முழுவதும் ஒலிக்கும் மு.க.ஸ்டாலின் குரல்” : தொல் திருமாவளவன் பேச்சு!
தென் சென்னை மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து கே.கே.நகர், எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய தொல்.திருமாவளவன், "இது வழக்கமான தேர்தல் அல்ல. தேசத்தின் வலிமையைப் பாதுகாப்பதற்கான யுத்தம். இந்த தேர்தலை வலிமையுடன் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கொண்டுள்ளார். அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகள் எல்லாம் நமது முதலமைச்சருக்கு ஒரு பொருட்டே இல்லை.
கூட்டணி முறிந்து கொண்டதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி ஒருமுறையாவது மோடியை விமர்சித்து இருக்கிறாரா?. இதை நீங்கள் ஒருமுறை சிந்திக்க வேண்டும். இந்த கள்ளக்கூட்டணி இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதிக்கும் கூட்டணி.
மோடியை எதிர்த்தால் அமலாக்கத்துறையைக் கொண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இருந்தும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாசிச பா.ஜ.க அரசைத் துணிச்சலுடன் எதிர்த்து வருகிறார்கள்.
பாசிச மோடி ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் ரேஷன் கடை இருக்காது. 100 நாள் வேலைத் திட்டம் இருக்காது. சமூக நீதி கோட்பாடு சிதைக்கப்படும். இட ஒதுக்கீடு இருக்காது. இதற்குப் பிறகு எந்த தேர்தலுமே நடக்காது. மாநில அரசுகள் கலைக்கப்படும். எனவே இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். 'இந்தியாவை பாதுகாக்க ஸ்டாலின் அழைக்கிறார்' என்ற குரல் தான் இப்போது தமிழ்நாடு முழுக்க ஒலித்துக் கொண்டு இருக்கிறது." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!