Tamilnadu
”தமிழ்நாட்டை நினைத்துத் தூக்கத்தை தொலைத்துவிட்டார் மோடி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தியா கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் வடசென்னையில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார். இன்று கொளத்தூர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்பகுதியிலிருந்த மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், திமுக ஆட்சியின் பல்வேறு திட்டங்கள் மற்றும் ஒன்றியத்தில் மாற்றத்திற்கான காரணம் உள்ளிட்டவற்றை விளக்கி வாக்கு சேகரிப்பில் கூட்டணி கட்சியினர் ஈடுபட்டனர். மேலும் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் வீதி வீதியாகச் சென்று அமைச்சர் சேகர்பாபு பரப்புரையில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ” பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும், எந்த வழியில் வந்தாலும், இங்கேயே தங்கி இருந்தாலும் மோடியின் பாட்சா தமிழ்நாட்டில் பலிக்காது. பிரதமர் மோடியை தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை நினைத்து நினைத்து தனது தூக்கத்தை மோடி தொலைத்து விட்டார். இந்த தேர்தலில் மோடியின் பாட்சா பலிக்காது. தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி உறுதியாகிவிட்டது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!