தேர்தல் 2024

“அரசியலில் மதம் கலந்த நாடு உருபட்டதாக சரித்திரம் இல்லை” - ஒன்றிய பாஜக அரசை விமர்சித்த கமல்ஹாசன்!

திராவிட மாடலில் சிலவற்றை பின்பற்றினாலே இந்திய மாடலை உலகமே பின்பற்றும் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

“அரசியலில் மதம் கலந்த நாடு உருபட்டதாக சரித்திரம் இல்லை” - ஒன்றிய பாஜக அரசை விமர்சித்த கமல்ஹாசன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியா கூட்டணி சார்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்த சூழலில் இவரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று ஸ்ரீரங்கம் இராஜகோபுரம் அருகில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த சமயத்தில், அமைச்சர் கே.என்.நேரு, துணை அமைப்புசெயலாளர் தாயகம் கவி, திருச்சி மேயர் அன்பகழன் , மாவட்ட செயலாளர் வைரமணி ஒரு லிட்டர் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது மக்களிடம் கமல்ஹாசன் பேசியதாவது, "செங்கோட்டை , புனித ஜார்ஜ் கோட்டைக்கு இரண்டிற்கும் மூத்தது மலைக்கோட்டை. தமிழகத்தில் இடம் பிடிக்க வந்த சிலரை எதிர்த்து நிற்கிறது திருச்சி. நான் இங்கு எதற்காக வந்துள்ளேன் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தேசம் என்பது என்ன தேசபக்தி என்பது என்ன? அரசு என்பது என்ன?

அரசு என்பது விமர்சனத்திற்கு உரியது. ஆனால் இன்று அது தேசவிரோதம் என்கிறார்கள். இங்கே பல மதம் சார்ந்தவர்கள் பலமொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள். மதக்கலவரம் என்பது எங்கு நடந்தாலும் திருச்சியில் எப்போதும் நடக்காது. நாட்டின் பன்முகதன்மை கேள்விகுறியாகும் நிலை உள்ளது. பன்முகத்தை விரிந்த நோக்கு இல்லாத அரசு ஆபத்தானது.

“அரசியலில் மதம் கலந்த நாடு உருபட்டதாக சரித்திரம் இல்லை” - ஒன்றிய பாஜக அரசை விமர்சித்த கமல்ஹாசன்!

அரசை விமர்சிப்பது என் கடமை. 5 ஆண்டுக்கு ஒரு முறை அதை செய்தால்தான், நாடு நலமாக இருக்கும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை என் தம்பிக்காக வந்துள்ளேன். உங்கள் மனங்களிலும், உங்கள் இல்லங்களிலும் எனக்கு இடமுண்டு. நான் ஒவ்வொரு முறை தோன்றும் போது 1000 முறை இது போன்று பேசுவது உண்டு. என் காதல் உங்கள் அனைவரின் மீதும் உண்டு. அதனால் தான் அரசியலுக்காக வந்தேன்.

ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு குரல். திராவிட மாடல் என்று நான் சொல்கிறேன். அதனை பின்பற்றினாலும் இந்திய மாடலை உலகமே பின்பற்றும். மதிய உணவு மட்டுமல்ல காலை உணவினையும் வழங்கியுள்ளார் தமிழ்நாடு முதல்வர். நாம் 1 ரூபாய் வரியாக கொடுத்தால், 29 காசுகள் தான் நமக்கு திருப்பி தருகிறது ஒன்றிய பாஜக அரசு. அதில் தான் பலத்திட்டங்களை நமக்கு கொடுக்கிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உ.பி, பீகாருக்கெல்லாம் அதிகம் கொடுக்கிறார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பது இந்தியில் இங்குள்ள இந்திபேசுபவர்களுக்கு புரிகிறது. இது ஒரு மாடல் ஒரு சிந்தாந்தம். முக்கியமாக பன்முகத்தன்மையை இழந்து விடக்கூடாது. தமிழ்நாட்டில் நாம் செயல்படுத்தும் திட்டங்களை நாம் இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகே இந்தியாவை திரும்பி பார்க்கும்.

மகளிர் உரிமைத்தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம், இவையெல்லாம் இந்தியா முழுவதும் ஏன் வரக்கூடாது? எனக்கு தனி நபர் மீது கோபம் ஏதுமில்லை. நல்லதை பாரட்ட வேண்டும். அனைவருக்கும் இங்கு இடமுண்டு என்பதற்கு நானே சாட்சி. எனக்கு எவ்வித சாயலுமின்றி வாழ முடிந்தது. நீ யார் எங்களிடம் வரி கேட்பதற்கு என்று கட்டபொம்மனுக்கு முன்பாக கேட்டவர் மருதநாயகம்.

“அரசியலில் மதம் கலந்த நாடு உருபட்டதாக சரித்திரம் இல்லை” - ஒன்றிய பாஜக அரசை விமர்சித்த கமல்ஹாசன்!

தேசம் என்ற ஒரு வரைப்படத்தின் முழு வரைப்படம் தெரியாதபோதே தன் நெஞ்சில் வரைந்தவர் மருதநாயகம். வரலாற்றை அறிந்துக்கொள்ள வேண்டும். எதிர்த்து குரல் கொடுத்தால் இல்லாமல் செய்வது ஒரு அரசியல். எதிர்த்து குரல் கொடுத்தால் என்ன சொல்கிறார் என்பதை கேட்பது இந்திய அரசியல். ஆனால் அண்ணன் தம்பிகளை மோதவிட்டு பார்பது தான் இன்றைய அரசியல்.

ஜி.எஸ்.டி வரிக்கு பின் சொந்தமாக தொழில் செய்தவர்கள் இன்று என்ன ஆகுமோ என பயப்படுகிறார்கள். தமிழ்நாட்டை பிடிக்க நினைத்தால் வழுக்குகிறது. உடனே ஆளுநரை அனுப்புகிறது. அதற்கும் பயப்படவில்லை என்றால், முதல்வரை கைது செய்கிறது ஒன்றிய பாஜக அரசு. ஆனால் நீங்கள் எல்லோரும் முதல்வருக்கெல்லாம் முதல்வர்கள்.

எனக்காக நான் ஓட்டுகேட்டு வரவில்லை தம்பிக்காக வந்துள்ளேன். இதில் என் கட்சிக்காரர்களுக்கு வருத்தம். ஆனால் நாளை நமகே கஷ்டப்படாமல் எதும் கிடைக்காது. இந்த வடை பசியினை ஆற்றாது. ஏன் என்றால் இது வாயால் சுட்ட வடை. அரசியலில் மதம் கலந்த நாடு உருப்பட்டதாக சரித்திரமில்லை. பட்டேலுக்கு சிலை, மோடி விளையாட்டு அரங்கம்... ஆனால் மக்களுக்கு எய்ம்ஸ் இல்லை.

தேசிய நீரோட்டத்தில் கலக்கமாட்டீர்கள் என கேட்கிறார்கள். ஆனால் காந்தி என்றால் அத்தனை பேர் திரும்பி பார்ப்பார்கள், நேரு என்றால் தற்பொழுது என்னுடன் வாகனத்திலுள்ள அமைச்சர் (கே.என்.நேரு) திரும்பி பார்ப்பார் நாங்களா தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை?" என்றார்.

banner

Related Stories

Related Stories