Tamilnadu
சுயேட்சை கூட நான் வெற்றி பெறுவேன் என்றுதான் சொல்வார் - எடப்பாடியை கிண்டல் செய்த அமைச்சர் துரைமுருகன் !
வேலூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் தேசிய செயலாளர் அப்துல் பாஷித் தலைமையில் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியானது நடந்தது இதில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "இஸ்லாமியர்கள் ஒன்றிய பாஜக ஆட்சியால் தொழுகையின் போதே பூட்ஸ் கால்கலால் உதைத்து தாக்கபடுகின்றனர். இதற்கு பிரதமர் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை இதற்கெல்லாம் பாடம் புகட்ட விடியல் ஏற்படும்"என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நாங்கள் தான் வெற்றிபெறுவோம் என கூறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "சுயேட்சை வேட்பாளர் கூட நான் தான் வெற்றி பெறுவேன் என்று சொல்வார்.
அது அந்தந்த கட்சிக்கு இருக்கும் உரிமை. ஒவ்வொரு கட்சிக்கும் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்ல உரிமை உண்டு. எந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதை பொதுமக்கள் தீர்மானிப்பார்கள்" என்று கூறினார் .
பின்னர் பாஜக திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் என சொல்கிறார்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நிறைவேற்ற கூடிய வாக்குறுதிகளா நிறைவேற்ற முடியாத வாக்குறுதியா என்பதை எங்களின் செயல்பாட்டில் தான் பார்க்க வேண்டும்" என பதிலளித்தார்.
Also Read
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!