Tamilnadu
பாஜக கொடிக்கம்பம் சாய்ந்து பயங்கர விபத்து... படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் !
நாடே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி நிறைவடைந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தலை முன்னிட்டு பல்வேறு விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. அதில் குறிப்பாக பிரசாரத்தில் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்தக்கூடாது; சட்டவிரோத பணம், மதுபானம், போதைப் பொருட்கள், இலவசங்கள் ஆகியவற்றைத் தடுக்க உரிய அதிகாரிகளோடு விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே, அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தனது பிரசாரத்தை தொடங்கினார். எனவே தமிழ்நாட்டில் முதற்கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியான நிலையில், பிரதமர் மோடிக்கு தேர்தல் அறிவிப்பு குறித்து ஏற்கனவே தெரிந்துள்ளது என்றும், இது ஜனநாயக படுகொலை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக பாஜக ஆங்காங்கே பிளக்ஸ், பேனர் என பலவை வைத்துள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் கொடிக்கம்பத்தையும் வைத்துள்ளது. இந்த சூழலில் நேற்று இரவு நேரத்தில் பாஜக கொடிக்கம்பம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கொருக்குப்பேட்டையில் பாஜக கொடிக்கம்பம் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த கொடிக்கம்பம் திடீரென சரிந்துள்ளது. அப்போது அந்த பகுதியில் இருந்த விஜயா என்ற பெண் மீது அந்த கொடிக்கம்பம் விழுந்ததில், அவரது முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதில் துடிதுடித்து அலறவே, அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் விஜயாவுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்க பாஜக சார்பில் வைக்கப்பட்ட 50 அடி கொடிக்கம்பம் திடீரென கீழே விழுந்ததில், ஒருவர் மண்டை உடைந்து படுகாயமடைந்தபோது, அதனை கண்டுகொள்ளாமல் அண்ணாமலை சென்றுள்ள சம்பவம் பெரும் கண்டனங்களுக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!