Tamilnadu
”தமிழ்நாட்டில் சமூக பதற்றத்தை தூண்ட பார்க்கும் ஆர்.என்.ரவி” : தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு!
கால்டுவேல் மற்றும் ஜி.யு.போப் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசிய தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தென்னிந்தியத் திருச்சபை சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், " ஜி யு போப் மற்றும் கால்டுவெல் ஆகியோரை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய கருத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பப் பெற வேண்டும். தேர்தல் நேரத்தில் சமூக பதற்றத்தை ஏற்படுத்துவது சங்பரிவார் அமைப்புகளில் உத்தி. அந்த வகையில் ஆர்எஸ்எஸ் ஏஜென்டாக தமிழ்நாட்டில் இருக்கும் ஆர்.என்.ரவி கிறிஸ்தவர்களைச் சீண்டிப் பார்க்கிறார். ஆளுநரின் இந்த போக்கு கடுமையான கண்டனத்திற்குரியது.
சி.ஏ.ஏ சட்டத்தை இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு தற்போது அரசியல் ஆதாயத்திற்காகவும், மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தவும் தற்போது இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகிற ஒரு சதி முயற்சி. சிஏஏ சட்டத்தை கண்டித்து மார்ச் 15 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வி.சி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!