Tamilnadu
பெரியார் பல்கலை. பதிவாளரை பணி நீக்கம் செய்யவேண்டும் : வேலை நிறுத்த போராட்டத்தை அறித்த ஆசிரியர் சங்கம் !
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது நாளை முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், தனியார் நிறுவனமான பூட்டர் பவுண்டேஷன் மற்றும் பூட்டர் பார்க் (PUTER Park) நிறுவனங்கள் மூலம் பயிற்சி கல்வி பாடத்திட்டம் வழங்குவது தொடர்பாகப் பல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகார் எழுந்தது.அதன்பேரில், பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த டிசம்பர் 26ந் தேதி கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே பூட்டர் பவுண்டேஷன் செயல்பாடு மற்றும் அதில் நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பாக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு ஆதரவாளர்களான பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி, துணை பேராசிரியர்கள் நரேஷ் குமார், ஜெயக்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை காவல் நிலையம் வரவழைத்து காவல் உதவி ஆணையர் நிலவழகன் அண்மையில் விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள பல்கலைகழக பதிவாளர் தங்கவேலுவும் சம்மந்தப்பட்டது உறுதியானது.
இந்த சூழலில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பல்கலைக்கழக பதிவாளராக செயல்பட்டு வந்த தங்கவேல் பணியில் இருந்துகொண்டே அப்டெக்கான் ஃபோரம் என்ற தனியார் நிறுவனத்திலும் இயக்குநராக இருந்துள்ளது அம்பலமானது.
விதிப்படி அரசு சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் மற்றொரு ஆதாயம் தரும் பதவியில் இருக்ககூடாது என சட்டம் உள்ள நிலையில், அதனை மீறி தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தது விதிமீறலாகும். இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அதனைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை பணி நீக்கம் செய்திட தமிழ்நாடு அரசின் முதன்மை செயலர் பரிந்துரைத்தார். ஆனால், அவரை பணிகீக்கம் செய்ய மறுத்த பல்கலைக்கழக துணை வேந்தர், அவருக்கு மருத்துவ விடுப்பு அளித்தார். இதற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை பணி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது நாளை முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மேலும், மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்ட பதிவாளர் தங்கவேலு இன்று பணியில் சேர்ந்ததற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!