Tamilnadu

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: ஒரேநாளில் 2.17 லட்சம் பேர் பயணம்!

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையானது 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை நாளை போகி பொங்கலுடன் தொடங்குகிறது.

இதையடுத்து சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வேலைக்காக சென்றவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று முன்தினம் இருந்தே சென்று வருகிறார்கள்.

இந்நிலையில் பொதுமக்கள் எவ்விதமான சிரமங்களையும் சந்திக்காமல் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாகச் சென்னையில் மட்டும் கடந்த ஜன.12ம் தேதியிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

அதோடு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், பூந்தமல்லி மாநகர பேருந்து நிறுத்தம், தாம்பரம் வள்ளூவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம் மற்றும் கோயம்பேடு புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிறுத்தம் என 7 பேருந்து நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதோடு புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு வசதியாகக் கூடுதலாக மாநரக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் எவ்விதமான சிரமங்களையும் சந்திக்காமல் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 2.17 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதுவரை 1,96,310 பேர் சிறப்புப் பேருந்துகளில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் 7 இடங்களிலிருந்து அதிகமான சிறப்புப் பேருந்துகளை இயக்கியதால் சிரமமின்றி பயணம் செய்ததாகத் தமிழ்நாடு அரசின் சிறப்பான ஏற்பாட்டிற்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

Also Read: ”தமிழ்நாட்டு மக்கள் மனதில் மகிழ்ச்சியைப் பொங்க வைத்த முதலமைச்சர்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!