Tamilnadu

அவர் அமெரிக்காவில் இருந்தா வந்தாரு? : மாரி செல்வராஜ்க்கு ஆதரவாக கருத்து சென்ன நடிகர் வடிவேலு!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து திருநெல்வேலி பகுதியில் இயக்குநர் மாரி செல்வராஜ் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதையடுத்து வேண்டும் என்றே சிலர் சமூக ஊடகத்தில் இயக்குநர் மாரி செல்வராஜை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதையடுத்து மாரி செல்வராஜ்க்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் வடிவேலு, "இயக்குனர் மாரி செல்வராஜ் ஏன் அங்குச் செல்கிறார் என்று சிலர் கேட்கிறார்கள். அது அவருடைய ஊர். அந்த ஊரில் மேடு பள்ளம் எங்கு உள்ளது என்று அவருக்குத்தான் தெரியும். அவர் ஊரில் அவர் போகாமல் வேறு யார் போவார்கள்?. அவரு என்ன அமெரிக்காவில் இருந்தா வந்தாரு. அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏன் சென்றார் என்று கேட்கிறார்கள். அவர் மீட்புப் பணிகளை ஆய்வு செய்து அதைத் துரிதப்படுத்தச் செல்கிறார்கள். இதை அவர்தானே செய்ய முடியும். இதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் சிலர் வேண்டும் என்றே தப்பு தப்பா பேசுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

Also Read: திருநெல்வேலி : கனமழையால் பாதிக்கப்பட்ட 50,000 குடும்பத்தினருக்கு உணவு வழங்கும் அமைச்சர் எ.வ.வேலு !