Tamilnadu
‘ஜெய் ஸ்ரீ ராம்’ வாசகம்... மாணவர்களிடம் மதத்தை புகுத்தும் திருவாரூர் பல்கலை. : குவியும் கண்டனம் !
ஆண்டதோறும் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பல பள்ளி கல்லூரிகளில் மாணவ - மாணவியர் இந்த பண்டிகையை கொண்டாடினர். இன்னும் சில கல்லூரிகளில் தீபாவளி பண்டிகை முடிந்தபோது கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் கடந்த 17-ம் தேதி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதப்பட்ட வாசகம் பொருந்திய பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. மாணவர்கள் மத்தியில் மதத்தை புகுத்துகிறது என்று பல்கலை நிர்வாகத்திற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஒரேயொரு மத்திய பல்கலைக்கழகமாக, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் அருகே நீலக்குடி பகுதியில் அமைந்துள்ளது. இதனை மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் அவர்களின் பெரும் முயற்சியில் கிடைத்தது. இந்த சூழலில் இங்கு நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின்போது, 'ஜெய் ஸ்ரீ ராம்' வாசகம் எழுதப்பட்ட பேனர் உள்ளிட்டவை ஆங்காங்கே காணப்பட்டுள்ளது.
மேலும் மேடைகளில், கோலங்களில் எல்லாம் இந்த வாசகம் இடம்பெற்றுள்ளது. அதோடு புரோகிதர்களை அழைத்து வந்து மந்திரங்கள் சொல்லி பூஜை செய்து தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் இந்த செயலுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது. அதிலும் அந்த பூஜையில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.கிருஷ்ணா கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில், துணை வேந்தர் கிருஷ்ணாவுக்கு எதிராகவும், மாணவர்கள் மத்தியில் மதத்தை புகுத்திய பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராகவும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், "பல்கலைக்கழகங்களில் அரசின் செலவில் நடைபெறும் மாணவர்களுக்கான இது போன்ற கொண்டாட்ட நிகழ்வுகளில், மதத்தை புகுத்தியது முற்றிலும் தவறு. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று இந்திய மாணவர் சங்கம் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!