Tamilnadu
“நான்தான் ஒன்றிய அரசின் இணைச் செயலாளர்..” - போலிஸிடம் ஆள் மாறாட்டம் செய்த நபர்.. தட்டி தூக்கிய போலிஸ் !
சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் அன்புராஜ். இவர் வழக்கம்போல் கடந்த 3 ஆம் தேதி பணியில் இருந்தபோது பிற்பகல் 1 மணியளவில் காவல் ஆணையாளர் அலுவலக தொலைபேசிக்கு 8300759418 என்ற கைப்பேசி எண்ணிலிருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதனை எடுத்து பேசியபோது, எதிர் முனையில் இருந்து பேசிய நபர் தன்னை V.C.சுக்லா என்றும், தான் ஒன்றிய அரசின் நிதி துறையின் இணைச் செயலாளராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் உடனடியாக காவல் ஆணையரிடம் பேச வேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறியுள்ளார். ஆனால் தற்போது காவல் ஆணையர் இங்கு இல்லை என்றும், அவர் வேறு அலுவகத்தில் இருப்பதாகவும் தலைமைக் காவலர் அன்புராஜ் கூறியுள்ளார்.
பின்னர் மீண்டும் பகல் 1.30 மணிக்கு தொடர்புகொண்டு மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஆணையரிடம் தெரிவிக்குமாறும், இது சம்மந்தமாக நாக சுப்பிரமணியன் என்பவரை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரித்ததில் நாக சுப்பிரமணியன் என்பவர்தான் பொய்யாக தன்னை அரசு செயலாளர் என சொல்லி ஆள் மாறாட்டம் செய்து பேசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைக் காவலர் அன்புராஜ் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது IAS அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றிய மாங்காடு பகுதியை சேர்ந்த நாகசுப்பிரமணியன் (54) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட நாகசுப்பிரமணியன் தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட நாகசுப்பிரமணியன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின் சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!
-
"உலக மயமாகிக் கொண்டுள்ளார் தந்தை பெரியார்" - ஆசிரியர் கி.வீரமணி நெகிழ்ச்சி !
-
ED-க்கு ரூ.2 லட்சம் அபராதம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!