Tamilnadu
இஸ்ரேல் - ஹமாஸ் போர் : “மனிதம் மரத்துப் போய்விட்டதா?” - வேதனை தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது அந்த மோதல் போக்கின் காரணமாக போர் மூண்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் என்ற அமைப்புக்கும் இடையே தற்போது போர் நிலவி வருகிறது. தொடர்ந்து 11-வது நாளாக நடைபெற்று வரும் இந்த போரில், பல்லாயிரக்கணாக்கான மக்கள் தங்கள் உயிரை இழக்க நேரிட்டது.
தொடர்ந்து காசா பகுதியில் நடைபெற்று வரும் இந்த போரின் காரணமாக பொதுமக்கள், குழந்தைகள் என பலரும் உயிரிழந்து வருகின்றனர் இஸ்ரேல் வீரர்கள், ஹமாஸ் அமைப்பினர் என பலரும் பலியாகியுள்ளனர். இந்த போரை நிறுத்த வேண்டும் என்ற பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், சில நாடுகளில் உள்ள மக்கள் பேரணியும் நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் இந்த போர் உலுக்கியுள்ள நிலையில், இந்த போரை நிறுத்த வேண்டும் என்றும், அப்பாவி மக்கள் இந்த போரினால் பாதிக்கப்படுவதாக இந்த போரை கைவிட வேண்டும் என்று இரு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடம் உலகம் முழுவதும் இருந்து கோரிக்கைகள் வருகிறது. .
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போரின் காரணமாக அப்பாவி பொதுமக்களே பலியாவதாக வேதனை தெரிவித்து போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பின்வருமாறு :
“போர் என்பதே கொடூரமானது! அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக காசா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் - உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன.
போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா? உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்.”
Also Read
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!
-
அரசுப்பள்ளி குழந்தைகளிடம் கேள்வி.. அடங்காத அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. குவியும் கண்டனங்கள்!
-
நீக்கப்படும் ‘மு’ : “உங்கள் ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா?” -விஜய்க்கு திமுக இளைஞரணி கேள்வி!
-
7-வது முறையாக.. மகளிர் டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு தொடரும் சோகம்!