Tamilnadu
வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் பானை.. தொழில் கூடம் இருந்ததற்கான அடுத்த ஆதாரமா ?
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில், 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில், கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பறப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசு இங்கு அகழாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வருகின்றனர்.
இந்நிலையில், இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண் அகல்விளக்கு, யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் ஆகிய அணிகலன்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆய்வில் திரவம் வடிந்த நிலையில் கூம்பு வடிவ சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சங்கு வளையல் தொழில் கூடம் இருந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சங்கு வளையல் தொழில் கூடத்தில் திரவ பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!