Tamilnadu
அதிகாலையில் நடந்த கோர விபத்து.. லாரி மீது மோதிய ஆம்னி வேன் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி!
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவருடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சஞ்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.
இதற்கிடையில் பிரியாவிற்கும் ராஜதுரைக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகச் சேலம் வந்துள்ளனர்.
பிறகு இவர்கள் தனது மகளை அழைத்துக் கொண்டு இன்று அதிகாலை ஆம்னி வேனில் ஈரோடு நோக்கி புறப்பட்டுச் சென்றனர். இவர்களது வாகனம் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சென்றபோது சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் ஆம்னி வேன் முற்றிலும் நொறுங்கியது. இந்த விபத்தில் ஓட்டுனர் விக்னேஷ் பலத்த காயமடைந்தார். மேலும் ஆம்னி வாகனத்தில் பயணம் செய்த செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி, பிரியா மற்றும் ஒரு வயதுக் குழந்தை சஞ்சனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்கள் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துகுறித்து வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திச் சென்ற லாரி குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்ககிரி அருகே இன்று அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!