Tamilnadu
“சீமானுக்கு அதிமுக உள்ளது.. சீமானை உடனே கைது செய்ய வேண்டும்” : கண்ணீருடன் நடிகை விஜயலட்சுமி பேட்டி !
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார் நடிகை விஜயலட்சுமி.
நடிகை விஜயலட்சுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீமான் தன்னுடன் இருந்ததாகக் கூறி சில புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இதன் காரணமாக சீமானின் ஆதரவாளர்கள் இவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இருப்பினும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீமான் மீது விமர்சனங்களை முன்வைத்து தனது ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவிடுவதும், நேரலையில் பேசுவதுமாக இருந்தார் விஜயலட்சுமி.
அதன்பின்னர் சீமானுக்கு ஆதரவாக ஹரி நாடார் தன்னை சாதி ரீதியிலும், தனிமனித ரீதியிலும் புண்படுத்தும்படி பேசியதாக குற்றஞ்சாட்டி வீடியோ ஒன்றினையும் வெளியிட்டார் நடிகை விஜயலட்சுமி.
சீமான் மீதும் ஹரி நாடார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர் “என்னால் வாழ முடியவில்லை, என்னுடைய மரணத்துக்கு நாம் தமிழர் கட்சியின் சீமானும், ஹரி நாடாருமே காரணம்” எனக் கூறியிருந்தார். இதனையடுத்து, குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக மயக்கமடைந்த விஜயலட்சுமி சென்னை அடையார் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இதனைத்தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்படவே நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைக்கவேண்டும் என நோக்கில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை நடிகை விஜயலட்சுமி சந்தித்தார். அப்போது கண்ணீர் மல்க பேசிய நடிகை விஜயலட்சுமி, “சீமான் மீது 2011ல் புகார் அளித்தது போல் தற்போதும் மீண்டும் புதிதாக புகார் அளித்துள்ளேன். என்னை சீமான் திருமணம் செய்தது உண்மைதான்; நான் சீமானின் மனைவி. அவரால் அவமானப்பட்டு இங்கு வந்து நிற்கிறேன்.
காசுக்காகவோ, பணத்திற்காகவோ நான் சீமானுக்கு எதிராக இந்த புகாரை அளிக்கவில்லை. சீமானுக்கு அதிமுக ஆதரவு உள்ளது. திருமணம் செய்து கொள்கிறேன் என்று சீமான் சமரசம் பேசினார். கடந்த அதிமுக ஆட்சியில் சீமானை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
என்னை நீதிமன்றம் செல்லவிடாமல் சீமான் தடுத்துவிட்டார். சீமானை கைது செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சீமானை கைது செய்யும் வரை என்னுடைய போராட்டம் தொடரும். நாம் தமிழர் கட்சியை நடத்துவதால் தனது தம்பிகள் தன்னை பார்த்துக்கொள்வதாக சீமான் கூறுகிறார். நான் வெளியிட்டுள்ள வீடியோக்களுக்கு சீமானின் பதில் என்ன?” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமியின் இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பலரும் சீமானுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
Also Read
-
பயணிகளுக்காக... 100 புதிய குளு குளு மின்சார AC BUS.. அதிநவீன சொகுசு BUS.. தொடங்கி வைத்தார் துணை முதல்வர்!
-
தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி... 3 மாவட்டங்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள்!
-
அரசுப் பள்ளிகளில் வகுப்பறை முதல் கழிவறைகள் வரை.. திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.145 கோடியில் தங்கும் விடுதி.. புதிய அடுக்குமாடி C வகை குடியிருப்பு.. திறந்து வைத்தார் முதலமைச்சர் !
-
வேலூரில் அணை அமைக்கும் பணி முதல் பாலாறு அணைக்கட்டு வரை... பணிகளை அடுத்தடுத்து தொடங்கி வைத்த முதலமைச்சர்!