Tamilnadu
உயிருக்கு போராடிய சாரை பாம்பு.. அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்கள்: கோவையில் நெகிழ்ச்சி!
விவசாயிகளின் நண்பனாக உள்ள உயிரினங்களில் ஒன்று சாரைப் பாம்பு. வயல்வெளிகளில் எலிகளை வேட்டையாடுவதனால் விவசாய நிலங்கள் உதவியாக சாரைப் பாம்புகள் இருந்து வருகிறது. இந்த பாம்புகள் விசத்தன்மையற்றது. வழக்கமாக இவை நிலங்கள், நீர் நிலைகள் ஆகிய இடங்களிலும் இருக்கும்.
அப்படி நீர் நிலையிலிருந்த சாரை பாம்பு ஒன்று, மீன் பிடிக்கச் சென்ற ஒருவரின் தூண்டில் முள் குத்தி காயமடைந்துள்ளது. இதனால் பாம்பு இயல்பான வேகத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டது. இதனைப் பார்த்த குறிச்சி பொதுமக்கள் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர், மோகன் என்ற பாம்பு பிடி வீரர் சம்பவ இடத்திற்கு வந்து சாரைப் பாம்பைப் பிடித்து கோவையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு பாம்பை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்தனர். பிறகு பாம்பின் உடலில் குத்து இருந்த தூண்டில் முள்ளை அகற்றினர்.
பின்னர் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு சாரைப் பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தூண்டில் முள் குத்தி உயிருக்குப் போராடிய பாம்பை மீட்ட வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பின் பாம்பு பிடி வீரர் மோகன் மற்றும் கால்நடை மருத்துவர்களை வன உயிரியல் ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
“தமிழ் மீனவர்களை கைவிடும் ஒன்றிய அரசு!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
திருவண்ணாமலையில் 33 ஏக்கர் பரப்பளவில் ‘மு.க.ஸ்டாலின் பூங்கா’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பார்க்கிறது பா.ஜ.க” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“தமிழ்நாடுதான் Electronics துறையின் Capital” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மதுரை மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்? : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சரமாரி கேள்வி!