Tamilnadu
திருமணம் நடந்த 6 மாதத்தில் இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு.. சோகத்தில் உறவினர்கள்!
வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சம்சுஷேக். இவருக்கு ஜிலானி என்ற பெண்ணுடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து புதிய தம்பதிகள் மகிழ்ச்சியுடன் இருந்து வந்தனர்
இந்நிலையில் ஜிலானி வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த போலிஸார் ஜிலானி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணம் நடந்து ஆறு மாதத்திலேயே புதுமணப்பெண் உயிரிழந்துள்ளதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு இளம் பெண் தற்கொலை தான் செய்து கொண்டாரா அல்லது கொலையா என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நடந்த ஆறு மாதத்தில் புதுமணபெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!