Tamilnadu
இன்டிகேட்டர் போடாமல் திரும்பியதால் வாக்குவாதம்: பைக் மீது மோதி இளைஞரை கொலை செய்த கார் ஓட்டுநர்! (Video)
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஷ்ணு (24), ஏழுமலை (30). விஷ்ணு அதே பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுங்குவார்சத்திரம் பஜாருக்கு இறைச்சி வாங்க பைக்கில் இருவரும் சென்றுள்ளனர் .
அப்போது விஷ்ணு ஓட்டி சென்ற பைக்குக்கு முன்பாக சென்ற கார் ஒன்று, இன்டிகேட்டர் எதுவும் போடாமல் திடீரென வளைவில் திரும்பி உள்ளது.இதனால் கட்டுப்பாட்டை இழந்த விஷ்ணு கார் மீது மோதினார்.
இதன் காரணமாக விஷ்ணுவுக்கும் ,காரை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் பண்ணூரை சேர்த்த பாங்கிராஸ் (62) ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிலர் விஷ்ணுவையும் காரை ஓட்டி வந்த பாங்கிராஸையும் சமாதானம் செய்து அனுப்பினர்.
பின்னர் அங்கிருந்து விஷ்ணு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். சிறிது தூரம் சென்ற நிலையில் பாங்கிராஸ் காரை அதிவேகத்தில் ஓட்டிச் சென்று விஷ்ணு சென்ற பைக்கின் பக்கவாட்டு பகுதியில் இடித்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றார்.
இந்த விபத்தில் விஷ்ணு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிர் இழந்தார். உடன் வந்த ஏழுமலை படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்த மக்கள் ஏழுமலையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஏழுமலைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரில் காரை இயக்கி சென்று வேண்டுமென்றே இடித்து விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பிற்கு காரணமான பாங்கிராஸை கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்து இருசக்கர வாகனத்தை அணைத்துக்கொண்டே சென்று காரின் பக்கவாட்டு பகுதியில் முட்டி தள்ளி இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
“எதிர்க்கட்சித் தலைவர் கைது.. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்த பாசிச தவெக அரசு” : துரைமுருகன் கண்டனம்!
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!
-
“நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புவேன்..” - கர்ஜித்த உதயநிதி.. போலீசை ஏவிய தவெக அரசு!
-
காவிரி விவகாரம் : “கர்நாடகாவை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?..” : விஜயை Left Right வாங்கிய முரசொலி !