Tamilnadu
குறைந்தபட்ச செயல் திட்டம் வேண்டும்.. பட்னா கூட்டத்தில் 6 முக்கிய ஆலோசனைகளை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர்!
இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மேலும் பெண்கள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவை இந்து பாரதமாக மாற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கையை அமல்படுத்த பா.ஜ.க அரசு தனது ஒவ்வொரு திட்டத்தையும் வகுத்து வருகிறது. மேலும் பொதுச் சொத்துக்களைத் தனியாருக்கு விற்று வருகிறது.
இதனால் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட பலரும் கூறி வந்தனர்.
இதற்குக் காரணம் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 38% வாக்குகளைப் பெற்றிருந்தது. மீதமுள்ள 62% வாக்குகளைப் பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் பங்கிட்டுக்கொண்டன. இதனால் தான் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்தால் பா.ஜ.கவை எளிதில் வீழ்த்த முடியும் என கருதப்படுகிறது.
இதன் அடிப்படையில் இன்று பாட்னாவில் எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 17 அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தி.மு.க தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க,
மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதிலே அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்கிறோம். இதில் கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும் என்பதை இன்று பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
1.மாநிலத்தில் செல்வாக்கில் உள்ள கட்சியின் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும்.
2.கூட்டணி அமைக்க முடியவில்லையென்றால் தொகுதிப் பங்கீடு செய்துகொள்ளலாம்.
3. அதுவும் முடியவில்லையென்றால் பொது வேட்பாளரை அறிவித்துக்கொள்ளலாம்.
4. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி சரியான நிலைப்பாடாக இருக்காது.
5.அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல் திட்டம் அமைக்க வேண்டும்.
6. இவை சரிவர நடைபெறுகிறதா என்பதைக் கவனிக்க நடவடிக்கை குழு ஏற்படுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
பா.ஜ.கவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று நினைத்தோம். அந்த ஒற்றுமை பாட்னாவில் ஏற்பட்டிருக்கு. ஒற்றுமையே வெற்றிக்கு அடிப்படை. அகில இந்திய அளவில் பா.ஜ.க தோற்கடிக்கப்படும். பாட்னாவில் கூடினோம், மகிழ்ச்சியாகத் திரும்பி இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!