Tamilnadu

ஒரே நாளில் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்.. மக்கள் மகிழ்ச்சியில் திராவிட மாடல் அரசு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 09.06.2023 அன்று திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு வருகை புரிந்த போது லால்குடி வட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி மகாஜனம் கிராம பொது மக்கள் பேருந்து வசதி வேண்டி நேரடியாகக் கோரிக்கை வைத்தனர்.

அடிப்படையில், அக்கோரிக்கையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு ஆணையிட்டார்கள்.

அதன்படி ,காலை8.00 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு லால்குடியிலிருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கும், காலை 8.35 மணி மற்றும் மாலை 06.05 மணிக்கு ஆலங்குடி மகாஜனத்திலிருந்து லால்குடிக்கும் என தினசரி 4 நடைகள் இப்பேருந்து சேவை உடனடியாக இன்று முதல் இயக்கப்பட உள்ளது..

இவ்வழித்தடத்தில் காலை மற்றும் மாலையில் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் பொது மக்கள், பள்ளி மாணாக்கர்கள் மற்றும் கட்டணமில்லாமல் மகளிர் எளிதில் பயணம் செய்யும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நகரப் பேருந்து மூலம் கூடுதலாகப் பேருந்து வசதி இயக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து முதலமைச்சரின் உத்தரவை அடுத்து ஆலங்குடி மகாஜன கிராமத்தில் இருந்து லால்குடிக்கு சென்ற முதல் பேருந்திற்குச் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, மாலை அணிவித்தும், வண்ண காகிதங்களை ஒட்டி, உற்சாகமாக நடனமாடி தங்களது மகிழ்ச்சியைக் கிராம மக்கள் வெளிப்படுத்தினர்.

பிறகு அந்த பேருந்தில் சிறியவர்கள், பெரியர்கள் என அனைவரும் ஏறி பயணம் செய்தனர். எங்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Also Read: திருச்சியில் கோரிக்கை வைத்த சிறுமி.. சென்னை வந்த உடனே நிறைவேற்றி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!