Tamilnadu
“தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை தற்போது சிறப்பாக உள்ளது..” : தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி பேட்டி !
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள தமிழகத்தின் இரண்டாவது பயிற்சி மையத்தின் புதிய வலை பயிற்சி அரங்கை இந்திய கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் உதவியோடு திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைப்பயிற்சியில் பயிற்சி பெறும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு தனது கையெழுத்திட்டும், செல்ஃபி புகைப்படம் எடுத்தும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், தமிழகத்தின் முன்பு இல்லாத அளவிற்கு தற்போது வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திக்கொண்டு, தன்னைப் போன்ற கிராமப்புற பகுதிகளில் இருப்பவர்கள் வெளியே வர வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து விளையாட்டு வீரர்கள் தேர்வாக வேண்டும் என்பது எனது விருப்பம். 20 ஓவர் போட்டி , டெஸ்ட் கிரிக்கெட் என பிரித்துப் பார்க்க முடியாது; ஒவ்வொன்றும் தனித்துவமானது எப்பொழுதும் டெஸ்ட் போட்டியில் தான் திறமையை நிரூபிக்க முடியும்.
நான் கிரிக்கெட்டில் வந்த காலத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை தற்பொழுது வாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் , டி.என்.பி.எல் போன்ற விளையாட்டுக்கள் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. டி.என்.பி.எல் மூலமாக 13 பேர் ஐ.பி.எல் போட்டியில் தமிழகத்தில் இருந்து இடம்பெற்றுள்ளனர்.
வீரர்கள் தங்களது ஆரோக்கியத்தை காத்து வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் உதவிச் செயலாளர் பாபா , தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் தலைமை பயிற்சியாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!