Tamilnadu
“I LOVE YOU ஸ்டாலின் Uncle..” இரு கன்னங்களுடன் மகிழ்ச்சியாக 10-வது பிறந்தநாளை கொண்டாடிய சிறுமி டானியா !
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள வீராபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - செளபாக்கியம் தம்பதியர். இவர்களின் மகள் டானியா என்ற 9 வயது மகள் அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிறுமியின் பெற்றோர் பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளித்தும் இந்நோய் குணமாகவில்லை. இது மெல்ல மெல்ல சிறுமியின் வலது கன்னம், தாடை, உதடு என ஒரு பக்க முகம் முழுவதும் பரவி சிதைவு ஏற்படத்தொடங்கியது.
இதையடுத்து சிறுமியின் குடும்பம் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிந்தவுடன், உடனடியாக சிறுமி டானியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முதல்கட்ட முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு மருத்துவமனைக்கும், வீடு திரும்பிய பிறகு வீட்டுக்கு சென்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். தற்போது சிறுமி பூரண குணமாகி பள்ளிக்கு சென்று வருகிறார். தான் தற்போது நலமுடன் இருப்பதற்கு காரணம் முதலமைச்சர் என்று சிறுமி டானியாவும் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிறுமி டானியா இன்று தனது 10-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிறுமியின் பிறந்தநாளை அறிந்த மாதவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சுதர்சனம், ஒன்றிய செயலாளர் கோ தயாளன், மாவட்ட கவுன்சிலர் சதிஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சிறுமி டானியாவுக்கு கேக் வெட்டி கொண்டாடி பரிசுகளை வழங்கினர்.
இதையடுத்து சிறுமி டானியா தற்போது அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் "நான் முகச்சிதைவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டேன். ஸ்டாலின் ஐயா உதவியால் சரியாகிவிட்டேன். இந்த கன்னத்தை வைத்து நான் இப்போ பிறந்தநாள் கொண்டாடுகிறேன். எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. ஐ லவ் யூ ஸ்டாலின் அங்கிள்" என்று பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
நலம் காக்கும் ஸ்டாலின்: மருத்துவ முகாமில் தொடர்ந்து பயனுரும் வெளி மாநிலத்தவர்கள்- அமைச்சர் மா.சு பதிலடி!
-
நவம்பர் மாதம் முதல்... 4 மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல்.. அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?
-
உடன்பிறப்பே வா : 2000+ கழக நிர்வாகிகளை சந்தித்த முதலமைச்சர்... கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!
-
திமுக 75 அறிவுத்திருவிழா : ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
"திமுகவை போல் இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!