உலகம்

59 வயதில் காதலியை கரம்பிடிக்கிறார் அமேசான் நிறுவனர்.. இரகசிய நிச்சயம்: வெளியான தகவலால் குவியும் வாழ்த்து!

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது காதலி லாரனை நிச்சயம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

59 வயதில் காதலியை கரம்பிடிக்கிறார் அமேசான் நிறுவனர்.. இரகசிய நிச்சயம்: வெளியான தகவலால் குவியும் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று தான் அமேசான். இந்த நிறுவனத்தின் நிறுவனர்தான் ஜெஃப் பெசோஸ். இவருக்கு கடந்த 1993-ல் மெக்கன்ஸி ஸ்காட் (MacKenzie Scott) என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு 4 பிள்ளைகள் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

59 வயதில் காதலியை கரம்பிடிக்கிறார் அமேசான் நிறுவனர்.. இரகசிய நிச்சயம்: வெளியான தகவலால் குவியும் வாழ்த்து!

இதனால் இருவரும் விவாகரத்துக்கு முறையிட்டனர். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்து பெற்ற மெக்கன்ஸி ஸ்காட், தனது முன்னாள் கணவரான ஜெஃப் பெசோஸிடம் இருந்து 38.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அமேசான் நிறுவனத்தின் 4% பங்குகளை பெசோஸ் ஜீவனாம்சமாக பெற்றுக்கொண்டார்.

59 வயதில் காதலியை கரம்பிடிக்கிறார் அமேசான் நிறுவனர்.. இரகசிய நிச்சயம்: வெளியான தகவலால் குவியும் வாழ்த்து!

இதனிடையே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த சூழலில் கடந்த 2018-ம் ஆண்டு ஜெஃப் பெசோஸ், லாரன் சான்செஸ் (lauren sanchez) என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. ஆனால் விவாகரத்து முடிந்த பிறகே, இவர்கள் காதல் விவகாரம் குறித்த செய்தி அதிகாரப்பூரவமாக வெளியானது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

59 வயதில் காதலியை கரம்பிடிக்கிறார் அமேசான் நிறுவனர்.. இரகசிய நிச்சயம்: வெளியான தகவலால் குவியும் வாழ்த்து!

ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் இருவருமே எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வருவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்தபோது கூட இருவரும் ஒன்றாக வருகை புரிந்தனர். பார்ட்டியாக இருக்கட்டும், அல்லது மீட்டிங்காக இருக்கட்டும் பெசோஸுடன் சேர்ந்து லாரனும் சென்று விடுவார். இவர்களது காதல் உறவு குறித்து சமூக வலைதளங்களில் பல செய்திகள் வெளியானது.

lauren sanchez
lauren sanchez

பிரபல ஊடகவியலாளரான லாரன், ஏற்கனவே பாட்ரிக் வைட்ஷெல் (Patrick Whitesell) என்ற அமெரிக்க தொழிலதிபரை திருமணம் செய்தார். இவர்கள் உறவும் 2019-ல் முடிவுக்கு வந்தது. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில் லாரன் பெசோஸுடன் காதல் கொண்டார். இதையடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், இருவருமே ஒருவரை ஒருவர் பாராட்டி அண்மையில் பேட்டி அளித்தனர்.

59 வயதில் காதலியை கரம்பிடிக்கிறார் அமேசான் நிறுவனர்.. இரகசிய நிச்சயம்: வெளியான தகவலால் குவியும் வாழ்த்து!

அந்த வகையில் பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இவர்கள் இருவரும் பங்கேற்று சிறப்பித்தனர். இதற்காக பெசோஸ் தனது 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொகுசு படகில், தனது காதலி லாரனை அழைத்துச் சென்றுள்ளார். அங்கே இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

59 வயதில் காதலியை கரம்பிடிக்கிறார் அமேசான் நிறுவனர்.. இரகசிய நிச்சயம்: வெளியான தகவலால் குவியும் வாழ்த்து!

இந்த நிலையில் லாரன் தனது கையில் வைர மோதிரம் அணிந்து இருப்பதாகவும், இதன் மூலம் 59 வயதுடைய பெசோஸுக்கும் 53 வயதுடைய லாரனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து இருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது. எனினும் இதுகுறித்து இருவரும் எந்த ஒரு அறிவிப்பையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories