Tamilnadu
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. 91.39% தேர்ச்சி: முதல் மூன்று இடம் பிடித்த மாவட்டங்கள் எவை?
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 மாணவர்கள் எழுதியிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in இணையதள முகவரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் மாணவர்களை விட மாணவிகள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16% தேர்ச்சி. மாணவிகள் 94.66% தேர்ச்சி. அதேபோல் 1023 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடம் (97.53% தேர்ச்சி). விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடம் (96.2% தேர்ச்சி).
ஆங்கிலத்தில் 89 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கணிதத்தில் 3649 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 3584 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 320 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
மேலும் 9703 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 112 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!