Tamilnadu
புனித தளங்களுக்கு ஹெலிகாப்டர் பயணம்.. போலி வலைதளத்தை உருவாக்கி மோசடி: மக்களுக்கு சைபர் க்ரைம் எச்சரிக்கை!
இந்தியாவில் உள்ள புனித தளங்களுக்கு ஆண்டுதோறும் அதிகமான மக்கள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இப்படி புனித தளங்களுக்கு செல்பவர்களை குறிவைத்து ஹெலிகாப்டரின் அழைத்துச் செல்வதாகக் கூறி போலியான முன்பதிவு வலைதளங்கள் மூலம் பண மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் போலிஸார் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இந்த வலைதளங்களில் ஹெலிகாப்டர் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்தவுடன் வாட் ஆப் எண்ணில் பணம் அனுப்பும் படி கூறிப்படுகிறது. பிறகு பணத்தை அனுப்பியவுடன் போலியான டிக்கெட் அனுப்பி பண மோசடி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக சைபர் க்ரைம் கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டிக்கெட் பதிவு செய்யும் முன்பு அந்நிறுவனத்தின் உண்மைத்தன்மை விசாரித்துக் கொள்ள வேண்டும்.
மொபைலில் வங்கி விவரங்கள் மற்றும் தனி நபர் விபரங்கள் பாதுகாக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், வலைத்தள நிறுவனத்தின் குறியீடு மற்றும் முகவரியைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையற்ற லிங்குகள் மற்றும் மெயில்களை திறக்க வேண்டாம் எனவும் சைபர் தொடர்பான குற்றங்கள் நடக்கும் பட்சத்தில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் மேலும் சைபர் தொடர்பான பாதுகாப்பு அறிவுரை சைபர் கிரைம் முகநூல் ட்விட்டர் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு இதுபோன்ற போலியான வலைதளங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!