Tamilnadu
”தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பது பெருமையாக உள்ளது”.. பி.சி.ஸ்ரீராம் பாராட்டு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 70 ஆண்டுகால பொது வாழ்க்கை பயணங்களைத் தமிழ்நாடு முழுவதும் புகைப்பட கண்காட்சியாக வைக்கப்பட்டு வருகிறது.
முதலில் சென்னையில் முதலமைச்சரின் 70 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தை எடுத்துக்கூறும் வகையில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்ற வளாகத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.
13 நாட்கள் நடந்த இந்த கண்காட்சியில் அரசியல் தலைவர்கள், பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதையைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தனர்.
இதையடுத்து மதுரை, கோவை போன்ற மாநகரங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சிகள் அமைக்கப்பட்டது. இக்காட்சியைப் பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில்"எங்கள் முதல்வர் எங்கள் பெருமை"என்ற புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சியைப் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் இன்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பி.சி ஸ்ரீராம், "தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பது தனக்குப் பெருமையாக இருக்கிறது. முதல் தடவையாக முதலமைச்சரின் புகைப்படங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிற தருணமாக இது அமைந்துள்ளது. நம்மைச் சுற்றி அனைத்தும் ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!
-
“கரூர் துயரத்தில் பொய்த் தகவல்களை கூறும் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
“பொதுமக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!