Tamilnadu
தமிழ்நாடு முழுவதும் 19 ஆயிரம் செல்போன் எண்கள் முடக்கம்: Cyber போலிஸின் அதிரடி நடவடிக்கையின் பின்னணி என்ன?
தற்போதுள்ள இணைய உலகில் நம்மால் இணையம் இல்லாமல் இயங்க முடியாது. ஆக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த இணையம் தற்போது அழிவுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எளிதாக இருக்க எண்ணி பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் இருக்கும் சிறு துளைகளை பயன்படுத்தி நமக்கே ஆபத்து விளைவிக்கின்றனர் சில கும்பல்கள்.
இணையம் பயன்படுத்தும் மக்கள் அன்றாடம் அதிகரித்தே காணப்பட்டு வருகிறது. எதுவேண்டுமானாலும் அது மொபைல் போன் மூலம் நம்மால் பெற இயல்கிறது. இதனை சில கும்பல் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதாவது சைபர் திருட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அதன் மூலம் பணத்தை திருடி வருகின்றனர்.
மேலும் மொபைல் எண்ணுக்கு போன் செய்து வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்கள் ஏடிஎம் எண்ணை கேட்டு அதன் மூலம் பணம் கொள்ளையடிப்பது, லிங்க் ஒன்றை குறுஞ்செய்தியாக அனுப்பி அதனை க்ளிக் செய்தவுடன் மொபைலை ஹேக் செய்து வங்கியில் இருந்து பணம் கொள்ளையடிப்பது உள்ளிட்ட பல பண மோசடியில் சில கும்பல் ஈடுபடுகிறது.
இதனை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மட்டுமின்றி, இதற்காக சைபர் போலீஸ் அமைக்கப்பட்டு அதில் புகார் அளித்தால் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இது போல் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே தான் காணப்படுகிறது. எனவே இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் செல்போன் எண்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய பிரத்யேக இணையதளம் ஒன்றை உருவாக்கியது.
இந்த இணையதளத்தில் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய செல்போன் எண்களை சைபர் கிரைம் போலிசார் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது. இந்த செல்போன் எண்களை ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு அந்த எண்கள் முடக்கப்படும். அதன்படி இந்த தளத்தில் நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள போலிசார் சைபர் மோசடியில் தொடர்புடைய எண்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் சைபர் மோசடிகளில் தொடர்புடைய சுமார் 20,197 செல்போன் எண்களை முடக்க போலிசார் பரிந்துரை செய்துள்ளனர். அந்த எண்களை ஆய்வு செய்து அதில் இருந்து 19,654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாடு 'சைபர் கிரைம்' போலிசார் தான் அதிகமான குற்றங்களில் தொடர்புடைய செல்போன் எண்களை முடக்குவதற்கு பதிவேற்றம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !