Tamilnadu

”இதை மறந்துவிட்டு பேசக்கூடாது”.. பேரவையில் பழனிசாமியை Left Right வாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் இன்று (20.4.2023) சட்டமன்றப் பேரவையில், குட்கா விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அளித்த பதில்:-

பேரவைத் தலைவர் அவர்களே, கஞ்சா, குட்காவைப் பற்றி பேச ஆரம்பித்தால் எந்த நிலைமைக்கு போகும் என்பதை இந்த அவையில் இருக்கக்கூடிய எல்லோரும் அறிவார்கள். போதைப் பொருட்களின் பிடியில் இந்த மாநிலத்தை விட்டுச்சென்றது உங்கள் ஆட்சியில்தான். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க பல தீவிர நடவடிக்கைகள் நாங்கள் எடுத்திருக்கிறோம்.

அதிமுக ஆட்சியில் 2020-ல் COTPA சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகள் 40 ஆயிரத்து 246. ஆனால் திமுக ஆட்சியில் இதுவரை பதிவான வழக்குகள் 63 ஆயிரத்து 656 வழக்குகள். அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டவர்கள் 37 ஆயிரத்து 846. திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்து 480 பேர். 2020-ல் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிமுக ஆட்சியில் 1 லட்சத்து 22 ஆயிரம் கிலோ.

ஆனால் திமுக ஆட்சியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் 3 லட்சத்து 37 ஆயிரத்து 295 கிலோ. 2016 அதிமுக ஆட்சியிலிருந்து எடுத்துக் கொண்டால் 2020-ல் NDPS சட்டத்தின்கீழ் போடப்பட்ட வழக்குகள் 5 ஆயிரத்து 403 மட்டும். ஆனால் திமுக ஆட்சியில், 2022-ல் மட்டும் 10 ஆயிரத்து 391 வழக்குகள். அதாவது double ஆக போடப்பட்டு போதைப் பொருட்களை ஒழிப்பதில் தீவிரத்தை நாங்கள் காட்டியிருக்கிறோம்.

கடந்த 6 வருடங்களில் அதிக எண்ணிக்கையில் போடப்பட்ட வழக்கு 2022-ல் தான். அதுவும் கழக ஆட்சியில்தான். அதேபோல் இச்சட்டத்தின்கீழ் அதிமுக ஆட்சியில் 2020-ல் 15 ஆயிரத்து 313 கிலோ கஞ்சாவும், 1 கிலோ 896 கிராம் Heroin-னும், 527 வாகனங்களும் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால் திமுக ஆட்சியில் 2022-ல் மட்டும் 27 ஆயிரத்து 140 கிலோ கஞ்சா, 22 கிலோ 58 கிராம் Heroin-ன், 1,242 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி போதைப் பொருள்கள் விற்போரின், விநியோகிப்போரின் 5 ஆயிரத்து 723 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்ட ஆய்வின்போதும், கள ஆய்வின்போதும் இந்த நடவடிக்கைகளை நான் துரிதப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

காவல்துறையினர் இவ்வளவு நேர்மையாக நடவடிக்கை எடுத்து வருகின்ற நேரத்தில் ஒரு சில “கருப்பு ஆடுகள்” காவல்துறையில் இருப்பதை, நமது காவல்துறை அதிகாரிகள் களையெடுத்து வருகிறார்கள். போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட இரவு-பகல் பாராமல் காவல்துறையினர் பணியாற்றி வருவது இந்த ஆட்சியில்தான்.

இதைவிட வெட்கக்கேடு என்ன என்று கேட்டால், அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்கள், DGP, Commissioner மற்றும் போலீஸ் அதிகாரிகளாக இருந்தவர்கள், அவர்கள் மீது CBI-யை வழக்குத் தொடுக்குக்கூடிய அளவிற்கு குட்கா நடமாட்டம் தலைவிரித்தாடியது அதை மறந்துவிட்டு பேசக்கூடாது.

சமீபத்தில்கூட முன்னாள் DGP, முன்னாள் Police Commissioner ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது நீங்கள் பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள். அதிமுக ஆட்சியில்தான் போதைப் பொருட்களின் மாநிலமாக தமிழ்நாட்டை விட்டுச் சென்றீர்கள். நிதி நெருக்கடியை சீரமைத்தது போல், இந்த நிர்வாகச் சீரழிவை சரி செய்துவது எங்கள் கடமையாக வந்திருக்கிறது. போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும் அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுத்திருப்பது இந்த அரசுதான்.

“போதைப் பொருட்களை நிச்சயமாக அடியோடு ஒழிப்போம். இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம்” இது திராவிடமாடல் அரசு என்பதை தெரிவித்து அமைகிறேன்.

Also Read: ”ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது”.. பேரவையில் பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!