Tamilnadu
”ஆளுநருக்குப் பெரியார் மண்ணான தமிழ்நாடு தக்க பாடம் புகட்டும்”... கனிமொழி MP ஆவேச பேச்சு!
சென்னை தெற்கு மாவட்டம் சைதை மேற்கு பகுதி தி.மு.க சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன பொதுக் கூட்டத்தில், தி.மு.க துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு, ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ, சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் பேசிய தி.மு.க துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, " தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பா.ஜ.க குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. மாநில அரசால் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களைக் கிடப்பில் போடும் ஆளுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆளுநருக்கு எதிரான இந்த பொதுக்கூட்டம் இதோடு நின்றுவிடாது. டெல்லி வரை சென்று இந்த கூட்டம் போராடும். ஆளுநர் தனது அதிகாரம் என்னவென்று புரிந்து கொண்டு நடக்க வேண்டும். இல்லையென்றால் பெரியார் மண் உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்.
ஆளுநர் பதவி வேண்டாம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் போராடிக் கொண்டிருக்கிறது. எங்களின் தியாகங்களை, போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதை முதலில் ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியதுபோல் மற்ற மாநிலங்களிலும் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பா.ஜ.க அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவிற்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு வழிகாட்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!