Tamilnadu

கடைநிலை தொண்டனையும் கைவிடாத திமுக.. சமூகவலைத்தளத்தில் உதவிகேட்டதும் ஓடிவந்த திமுக IT Wing செயலாளர் !

பழங்காலம் முதலே அறிவியலிலும், கல்வியிலும், மருத்துவத்திலும் புகழ்பெற்று திகழ்ந்தது தமிழ்நாடு. ஆனால், அதன்பின்னர் சனாதனத்தின் கோர பிடியில் சிக்கிய தமிழ்நாடு தனது பழம்பெருமையை இழக்கத்தொடங்கியது. கல்வியில் சிறந்த பலர் இருந்த தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தினரே கல்வி கற்க வேண்டும், இந்த சமூகத்தில் பிறந்தால் இந்த வேலையே செய்யவேண்டும் போன்ற சனாதன கொள்கைகள் தமிழ்நாட்டில் நுழைந்து தமிழ்நாட்டையே சிதைத்தது.

அதன்பின்னர் பார்ப்பனர் அல்லாத தலைவர்கள் நீதிக்கட்சி என்ற அரசியல் கட்சியை உருவாக்கி தமிழ்நாட்டில் அதிகாரத்தில் வந்து தமிழர் இழந்த உரிமைகளை ஒவ்வொன்றாக பெற்றுக்கொடுத்தனர். அதேநேரம் நீதிக்கட்சியின் முகமாக மாறிய பெரியார் 'திராவிடர் கழகம்' என பெயர்மாற்றம் செய்து பொதுமக்களிடையே இருந்த சனாதன கொள்கையை தகர்ப்பதே தனது லட்சியமாக கொண்டு வாழ்ந்தார்.

அவரின் தளபதியாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என்ற அரசியல் கட்சியை உருவாக்கி பெரியாரின் கொள்கைகளை சட்டமாக மாற்றும் முயற்சியில் இறங்கினார். அண்ணாவுக்கு பிறகு கலைஞரின் தலைமையில் திமுக பெரியாரின் கொள்கைகள் பலவற்றை நிறைவேற்றி தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்றியது.

கலைஞரின் காலத்துக்கு பிறகு அவரின் மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை இந்தியாவே பொறாமைப்பட்டு பார்க்கும் உயர்ந்த மாநிலமாக முன்னேற்றி வருகிறார். இப்படி வழிவழியாக வந்த திமுகவின் உறுதியான அஸ்திவாரமாக அதன் உடன்பிறப்புகள் திகழ்ந்து வருகின்றனர். தலைமுறை தலைமுறையாக கழகத்துக்கு தொண்டாற்றும் கோடிக்கணக்கான தொண்டர்கள் காரணமாகவே திமுக தற்போதுவரை உறுதியாக நின்று வருகிறது.

திமுக கழகமும் தனது தொண்டர்களை ஒருபோதும் கைவிடாமல் அவர்களுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் ஓடிச்சென்று உதவிகள் செய்துவருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.

சமூகவலைத்தளத்தில் திராவிட வெறியன் என்ற பெயரில் இயங்கிவரும் திமுக உடன்பிறப்பு ஒருவர் தனது தந்தை 35 வருடமாக கழகத்துக்காக உழைத்தவர் என்றும், அவருக்கு திடீரென்று மூளையில் இரத்த கசிவு காரணமாக வாய் பேச முடியாத நிலையில் நேற்று இரவு சேலம் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளேன் என்றும், அவருக்கு யாரும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை கண்ட திமுக IT Wing செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான TRB ராஜா உதவுமாறு கோரிக்கை விடுத்த திமுக தொண்டருக்கு உதவுமாறும் அது குறித்த தகவலை தனக்கு தெரிவிக்குமாறும் மருத்துவரும் IT Wing-ன் துணை செயலாளருமான தருண் என்பவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி அந்த திமுக தொண்டருக்கு மருத்துவசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை TRB ராஜாவும் அதே சமூகவலைத்தள பக்கத்தில் உறுதிசெய்துள்ளார். இதற்கு அந்த திமுக தொண்டர் நன்றி தெரிவித்துள்ளார். கழகத்தின் கடைநிலை தொண்டனையும் கைவிடாத திமுக தலைமை கழகத்தின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read: ராகுலோடு கைகோர்த்த RJD, JDU.. பீகாரில் அசுரபலம் பெற்ற காங்கிரஸ் கூட்டணி.. கைவிடப்பட்ட பாஜக!