Tamilnadu
“அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவிக்க மாட்டோம்”: ஐகோர்ட்டில் கடிதம் எழுதி அனுமதி வாங்கிய அர்ஜுன் சம்பத்!
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளன்று, மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இந்து மக்கள் கட்சிக்கு நிபந்தனையுடன் அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி அளிக்க பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தினருக்கு உத்தரவிடக் கோரி இந்து மக்கள் கட்சியின் சென்னை வடக்கு மண்டல வழக்கறிஞர் பிரிவு தலைவரான ஏ.அருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த காலங்களில் மனுதாரர் கட்சியினர் மாலை அணிவிக்க சென்றபோது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த முறை அளித்த உத்தரவாதத்தை போல மீண்டும் தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இந்து மக்கள் கட்சி சார்பில், பிறரை பற்றி கோஷங்கள் எழுப்ப மாட்டோம், வாத்தியங்கள் ஏதும் வாசிக்க மாட்டோம், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம், அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, சந்தனபொட்டு, விபூதி, குங்குமம் போன்றவற்றை அணிவிக்க மாட்டோம், காவல்துறை வாகனத்தில் சென்று வருவோம் என உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுந்தர் மோகன், ஏப்ர்ல 14ம் தேதி மாலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 9 நபர்கள் மட்டும், காவல்துறை வாகனத்தில் சென்று மாலை 4 மணிக்கு மேல் 4:30 மணிக்குள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
Also Read
-
"வள்ளுவரை திருடப்பார்க்கிறர்கள், வள்ளுவரின் வெப்பம் அவர்களை பொசுக்கிவிடும்" - முதலமைச்சர் ஆவேசம் !
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !