Tamilnadu

‘நான் முதல்வன் திட்டம்’ - ஒரே வருடத்தில் அதிகரித்த மாணவர்களின் திறன்.. தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு !

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த வருடம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைததார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து இலட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்.

அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும். தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

இந்த நிலையில், இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மாணவர்கள் பெரும் பலனை அடைந்துள்ளது தற்போது ஒரு சமூக வலைதள பதிவின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் ஹர்தன் பால் என்பவர் பதிவிட்டுள்ள பதிவில், நான் சில புதியவர்களை நேர்காணல் செய்தேன் (அவர்களில் பெரும்பாலோர் பி.டெக் இறுதி ஆண்டு மாணவர்கள்), அவர்களில் தமிழ்நாடு மாணவர்கள் அதிகமாக இருந்தார்கள்.

அவர்களின் சுயவிவரத்தை பார்க்கும்போது அவர்களின் அறிக்கையில் பொதுவான IBM கிளவுட் பயின்று வருகிறேன் என்ற சொல் இருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். அவர்கள் வேறு வேறு கல்லுரியில் இருந்து வந்த நிலையில் IBM கிளவுட் என்பதை குறிப்பிட்டிருந்தது எப்படி என்பதை அறிய ஆர்வமாக இருந்தேன்.

பின்னர் அடுத்த சுற்றின்போது அவர்களிடம் நீங்கள் ஒரு பொதுவான நிறுவனத்தில் IBM கிளவுட் கற்றுக்கொள்கிறீர்களா? என கேட்டபோது ஒவ்வொரு CSE/IT மாணவர்களுக்கும் கிளவுட் கற்றுத்தர தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதை கேட்டு ஆச்சரியமடைந்தேன். இது மாநில அரசின் நல்ல முன்முயற்சிகள், நாடு முழுவதும் இதேபோல் நடக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Also Read: “நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது” : வீண் அரசியல் செய்யும் வீணர்களுக்கு உதயநிதி தரமான பதிலடி !