Tamilnadu
கோயில் நிலத்தில் வீடு கட்டியிருந்த BJP நிர்வாகி: இடித்து 23 ஆயிரத்து 800 சதுரடி நிலத்தை மீட்ட அதிகாரிகள்!
பா.ஜ.க கட்சியின் கோயில் மேம்பாட்டு ஆன்மீகப் பிரிவின் மாநில துணைத் தலைவராக இருப்பவர் சங்கர். இவர் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் அம்முனி அம்மன் கோபுரம் அருகே, கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி இருந்தது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து வீட்டை காலி செய்யும் படி சங்கரிடம் பல முறை கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் அவர் காலி செய்யவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கானது கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை மீட்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் தலைமையில் திருக்கோயில் அசையா சொத்து ஆக்கிரமிப்பு பிரிவின் கீழ், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து போலிஸார், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டியிருந்த வீட்டை அதிகாரிகள் இடித்து மீட்டனர். தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!