Tamilnadu
கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகமாணவி கைது.. காதலரோடு சேர்ந்து செய்துவந்த கொடூர செயல் !
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மசாஜ் சென்டர் நடத்துவதாகவும், அதிக அளவு பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பெரியமேடு காவல் நிலையத்திற்கு புகார் ஒன்று வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலிஸார் அங்கு விசாரணை நடத்திய போது ஜெயப்பிரதா என்கிற மாணவியை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
முதலில் காதலரை சந்திக்க வந்ததாக கூறிய அந்த பெண் பின்னர் முன்னுக்கு முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலிஸார் அவரின் செல்போனை வாங்கி பண பரிவர்த்தனை செயலிகளின் கணக்கை ஆய்வு செய்தபோது பல லட்ச ரூபாய் பண பரிவர்த்தனை நடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்பின்னர் அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. 12-ம் வகுப்பு படிக்கும்போதே சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான பிரகாஷ் என்பவரை ஜெயபிரதா காதலித்து வந்துள்ளார். பிரகாஷ் பாலியல் தரகராகவும் வேலை செய்து வந்துள்ளார்.
அதன்தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று பிரகாஷ் கூறியதை நம்பிய ஜெயப்பிரதா பிரகாஷின் யோசனையை நம்பி சென்னையில் பிரபலமான பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளர். இவருக்கு பிரகாஷ் கல்லூரி கட்டணம் போன்றவற்றை கட்டி வந்துள்ளார்.
கல்லூரியில் பிரகாஷின் யோசனைப்படி கல்லூரி மாணவிகளிடம் நட்பாக பழகியுள்ள ஜெயப்பிரதா பின்னர் அவர்களின் பணத்தேவையை அறிந்து கடன்கொடுத்தும் தேவைப்படும்போது காசு கொடுத்ததும் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் இதே மாதிரி அதிகம் சம்பாதிக்கலாம் என்று மூளைச்சலவை செய்துள்ளார்.
பின்னர் அதற்கு உடன்படும் கல்லூரி மாணவிகளை வைத்து தனியார் விடுதி போன்றவற்றை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஜெயப்பிரதாவும் பிரகாஷும் ஈடுபடுத்தியுள்ளார். மேலும், இந்த கல்லூரி பெண்களை தொழிலதிபர்களுக்கு அனுப்பி 30 ஆயிரம் 40 ஆயிரம் பணத்தை இந்த ஜோடி வாங்கி அதில் சொற்ப பணத்தை மட்டுமே அந்த பெண்களுக்கு கொடுத்து மோசடி செய்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஜெயப்பிரதாவையும் பிரகாஷின் கூட்டாளி பிரேம் தாஸ் என்பவரையும் கைதுசெய்த போலிஸார் தனிப்படை அமைத்து ஜெயப்பிரதாவின் காதலர் பிரகாஷை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!