Tamilnadu
தமிழ்நாட்டில் முதல்முறை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த மொழி ஆய்வகத்தின் 10 சிறப்புகள்!
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக, மாணவர் கையாளும் மொழி ஆய்வகங்கள் என்ற திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. 2023-24-ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சரளமாக ஆங்கில மொழியைக் கையாளும் திறனை இந்த திட்டம் மேம்படுத்தும்.
மாநிலம் முழுவதிலும் 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.23 கோடி மதிப்பில் மொழி ஆய்வகங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மொழி ஆய்வகங்களின் வாயிலாக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 35 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்
இந்த திட்டத்தைத் தமிழ்நாட்டில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் ஆய்வகத்தில் உள்ள கணினியை இயக்கி பார்த்து மாணவர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். இதையடுத்து திட்டத்தின் சிறப்பு அம்சங்களைக் கொண்ட வீடியோ பதிவை வெளியிட்டார்.
பிறகு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மாணவர்கள் அச்சமின்றி ஆங்கிலம் பேசுங்கள். யாராவது கேலி கிண்டல் செய்வார்கள் என நீங்கள் ஐயம் கொள்ள வேண்டாம். மாணவர்களுக்குக் கல்வி முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு சார்பில் 'இல்லம் தேடி கல்வி', முதலமைச்சரின் கனவுத் திட்டமான'நான் முதல்வன் திட்டம்' போன்ற பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
இன்று துவங்கப்பட்டுள்ள மொழி ஆய்வகத் திட்டமும் எந்த அளவிற்கு மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இப்பள்ளியில் படிக்கும எட்டாம் வகுப்பு மாணவன் மணிகண்டன் மூலம் தெளிவாக நமக்கு தெரிகிறது..
இந்த மொழி ஆய்வகத்தில் படிப்படியாகத் தேர்வுகள் கணினி மூலமாக வைக்கப்பட்டு அதில் முதல் மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்குக் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புப் பரிசினை கண்டிப்பாக வழங்குவர் " என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!