Tamilnadu
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது என்ன?
அதிகரிக்கும் தற்கொலைகளை தவிர்ப்பது தொடர்பான அறிக்கையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் தற்கொலைகளைத் தடுக்க 6 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டதாகவும், தற்காலிக அடிப்படையில் பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை ஒன்றிய அரசு மூலம் நிரந்தரம் செய்யத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், தற்கொலை முயற்சிக்கு சாணிப்பவுடர் பெரிய அளவில் பயன்படுத்தி வரும் நிலையில் அவற்றுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்கொலைக்குப் பயன்படும் பொருட்களை வெளிப்படைத்தன்மையுடன் மருந்தகம் மற்றும் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் தற்கொலை உயிரிழப்புகளைத் தடுக்க, "மனம்" என்ற மனநல நல்லா தரவு மன்றம் துவங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்தியாவில் சாலை விபத்துகளில் 1.5 லட்சம் பேரும் தற்கொலை முயற்சி 2.5 லட்சமாகவும் தற்கொலை மரணங்கள் 1 லட்சமாகவும் இருந்து வருகிறது.
உலக அளவில் அதிக தற்கொலைகள் நடக்கும் நாடாக இந்தியா இருந்து வரும் நிலையில்,ஐஐடி வளாகத்தில் ஏற்பட்டுள்ள தற்கொலைகள் நான்கு காரணிகளால் ஏற்பட்டுள்ளது என ஆய்வு வெளியாகியுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வாயிலாக மற்ற மாணவர்களுக்கும் :'மனம்' திட்டம் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் மனம் திட்டம் மாணவர்களிடையே திடகாத்திரமான மன நிலையை நிச்சயம் ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் H3N2 வைரஸ் காய்ச்சல் சற்று அதிகரித்து இருந்தாலும் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கான அவசியம் தற்போது இல்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?