Tamilnadu
“RN.ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்..” : ஆளுநரைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் போராட்டம் !
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழ்நாட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்பதை தடுக்க தமிழ்நாடு அரசு மக்களின் நலனை கருதி சட்டமன்றத்தில் மு.க ஸ்டாலின் ஒட்டுமொத்த அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்புடன்ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தத் தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என் ரவி மூன்று நாட்களுக்கு முன்பு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதனால் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
உதகையில் தங்கியுள்ள ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்தும், உடனடியாக வெளியேற வலியுறுத்தியும் உதகை ஆளுநர் மாளிகை முன்பு உள்ள அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் முன்பு சி.பி.ஐ.(எம்) மற்றும் சிபிஐ கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து சி.பி.எம், சி.பி.ஐ கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் முன்பு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ(எம்) நிர்வாகி பத்ரி கூறுகையில், “அரசியல் சாசனத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி மீறுகிறார். முன்பு ஒப்புதல் அளித்துவிட்டு, இப்போது திருப்பி அனுப்புகிறார். தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்ட மாசோதவை ஆளுநர் காலதாமதம் செய்து இழுத்து அடிப்பது கடும் கண்டனத்திற்குறியது. ஆளுநர் தமிழ்நாட்டில் எங்குச் சென்றாலும் அவரைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!