தமிழ்நாடு

“ஆளுநரின் செயலுக்கு பின்னால் ஒன்றிய அரசின் சதி இருக்கிறது..” : வெளுத்து வாங்கிய நீதியரசர் அரிபரந்தாமன் !

ஆளுநரின் செயலை நான் ஆளுநரின் செயலாக பார்க்கவில்லை மாறாக இது மத்திய ஒன்றிய அரசின் செயலாக நான் பார்க்கிறேன் என நீதியரசர் அரிபரந்தாமன் தெரித்துள்ளார்.

“ஆளுநரின் செயலுக்கு பின்னால் ஒன்றிய அரசின் சதி இருக்கிறது..” : வெளுத்து வாங்கிய நீதியரசர் அரிபரந்தாமன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக திருவான்மியூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், “ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க கூறி ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்து முதலில் சட்டத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தலை மையமாக கொண்டு அதிமுக கொண்டு வந்தது. அப்பொழுது ஆளுநராக இருந்த பன்வருளால் புரோகித் இந்த தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அப்பொழுது ஒப்புதல் அளித்தது அ.தி.மு.கவுடன் தேர்தலில் இணை நிற்க வேண்டும் என்கின்ற நோக்கில் கொடுக்கப்பட்டதா என்கின்ற கேள்வி எழுகிறது.

“ஆளுநரின் செயலுக்கு பின்னால் ஒன்றிய அரசின் சதி இருக்கிறது..” : வெளுத்து வாங்கிய நீதியரசர் அரிபரந்தாமன் !

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைன் விளையாட்டுகளின் முதலாளிகள் தொழிற்சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். இந்த வழக்கை விசாரித்த முதல் அமர்வு சஞ்சய் பானர்ஜி தலைமையிலான நீதிபதிகள் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ரத்து செய்தனர். ரத்து செய்யும் பொழுது நீதிபதிகள் தரப்பில் சில குறைகளை சுட்டி காட்டியுள்ளார்கள். குறிப்பாக தமிழ்நாடு அரசுக்கு இந்த அதிகாரம் இல்லை என்று நீதிமன்றத்தில் கூறிய வார்த்தையை இல்லை என மறுக்கிறார்கள்.

அப்போது அ.தி.மு.க இந்த சட்டம் போடுவதற்கு முன்பு அனுபவம் மிக்க எந்த ஒரு கமிட்டி குழுவும் அமைத்து அவரிடம் ஒப்புதல் வாங்கவில்லை என்பதனை சுட்டிக்காட்டி சஞ்சய் பானர்ஜி தலைமையிலான அமர்வு தடைச் சட்டத்தை ரத்து செய்கிறது. இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு அப்பொழுது ஆட்சி அமைக்கப்பட்ட தி.மு.க அரசு ஆன்லைன் ரம்மி மூலம் தொடர்ந்து உயிர்கள் பலியாவதை கண்டு நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்து அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சட்டம் கொண்டுவரப்பட்டது.

“ஆளுநரின் செயலுக்கு பின்னால் ஒன்றிய அரசின் சதி இருக்கிறது..” : வெளுத்து வாங்கிய நீதியரசர் அரிபரந்தாமன் !

சட்டப்பேரவையில் இந்த சட்டம் வருவதற்கு முன்பு திமுக தரப்பில் போடப்பட்ட அவசர சட்டம் தொடர்பாக இதே கவர்னர் ஒப்புதல் அளித்தார். ஆனால் சட்டமன்றத்தில் தடை சட்டம் கொண்டு வந்த பின்பு ஒப்புதல் அளிக்கவில்லை. மாறாக பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து தடைச் சட்டத்தை கொண்டு வரும் பொழுது ஆளுநர் ரவி 6 மாதங்களாக கோப்புகளை வைத்துக்கொண்டு தற்பொழுது திருப்பி அனுப்பியுள்ளார்.

அவர் திருப்பி அனுப்பும் பொழுது குறிப்பிட்டுள்ள காரணம், ஆன்லைன் ரம்மி தொடர்பாக தொழில் செய்யக்கூடிய முதலாளிகளுக்கான உரிமையை ஆர்டிகல் 17 இல் வழங்கியிருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். இந்த தடை சட்டம் கொண்டு வந்தால் அவர்களின் உரிமை பறிக்கப்படுவதாகும் என தெரிவித்துள்ளார்.

“ஆளுநரின் செயலுக்கு பின்னால் ஒன்றிய அரசின் சதி இருக்கிறது..” : வெளுத்து வாங்கிய நீதியரசர் அரிபரந்தாமன் !

இதுவரை ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக 44 உயிர்கள் பறிபோகி உள்ளது. இதைப் பற்றி அக்கறைப்படாமல், முதலாளிகள் நடத்தக்கூடிய தொழில்களின் உரிமையை மட்டுமே கொண்டு லாபம் ஈட்டும் வேலையை பெருசாக எண்ணுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. மாநில அரசுக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறதா என்கின்ற பொழுது இதற்கான அதிகாரம் மாநில பட்டியலில் தான் உள்ளது.

சட்டமேதை அம்பேத்கர் இந்திய சட்ட அமைப்பை எழுதிய போது அவர்கள் அப்பொழுது தான் அவைஉறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சூதாட்டத்தை குறித்து எந்தவித சட்டமும் இயற்ற வேண்டாம் என தெரிவித்தார்கள். இதற்கு அம்பேத்கர் மறுப்பு தெரிவிக்கிறார். ஆன்லைன் சூதாட்டம் பொருத்தவரையில் மிகப்பெரிய வணிகம் நடைபெறுகிறது.

“ஆளுநரின் செயலுக்கு பின்னால் ஒன்றிய அரசின் சதி இருக்கிறது..” : வெளுத்து வாங்கிய நீதியரசர் அரிபரந்தாமன் !

கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு ஆளுநர் மத்திய ஒன்றிய அரசு செயல்படுகிறார்கள். மாறாக தேர்தல் மோசடி பத்திரம் என்கின்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். குறிப்பாக இந்த சட்டம் பொருத்தவரையில் கோடிக்கணக்கான பணத்தை அளிக்கக்கூடிய கார்ப்பரேட்கள் மற்றும் முதலாளிகள் கொடுக்கக்கூடிய பணங்கள் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாது.

இந்த சட்டத்தை பயன்படுத்தி முதலாளிகளிடம் கோடிக்கணக்கான பணத்தை பெறலாம். என்னைப் பொறுத்தவரையில் ஆளுநரின் செயலை நான் ஆளுநரின் செயலாக பார்க்கவில்லை மாறாக இது மத்திய ஒன்றிய அரசின் செயலாக நான் பார்க்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories