Tamilnadu
காணாமல் போன பச்சிளம் குழந்தை.. புகாரளித்த மனைவி.. போலிஸார் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி !
சென்னை மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. 20 வயதுடைய இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மொபைல் போன் மூலம் இளைஞர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த வருண் (20) ஆவார். இருவரும் முதலில் சாதாரணமாக பேசி வந்த நிலையில், இருவருக்குமிடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் அது காதலாக மாறவே, இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இந்த பழக்கம் இவர்களுக்கிடையே அதிக நெருக்கத்தை கொண்டதால், விஜயலட்சுமி கற்பமுற்றார். தொடர்ந்து இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சம்பவம் எதுவும் விஜயலட்சமி குடும்பத்துக்கு தெரியாத நிலையில், வருண் அந்த குழந்தையை தனது தோழி வீட்டில் கொடுத்து வளர்த்து வருவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு குழந்தை காணாமல் போனதாக விஜயலட்சுமி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து குழந்தையின் தந்தை வருணிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த குழந்தையை வருண் கொன்றது தெரியவந்தது. மேலும் தனது குழந்தையை தானே கொலை செய்து கூடுவாஞ்சேரி அடுத்த காரணையில் இருக்கும் சுடுகாடு பகுதியில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் ஜெயராஜ் மற்றும் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், தடவியல் நிபுணர்கள் ஆகியோர் நேரில் சென்று தடயங்களை சேகரித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து குழந்தையை கொலை செய்த காரணத்தை அதிகாரிகள் வருணிடம் விசாரித்து வருகின்றனர். பச்சிளம் குழந்தையை தந்தையே கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!