Tamilnadu
திமுக தொடர் அழுத்தத்தால் தாம்பரத்தில் நின்று சென்ற தேஜஸ் ரயில் : வாக்குறுதியை நிறைவேற்றி காட்டிய TR.பாலு!
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் இன்று முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்கிறது. இந்த சேவையின் தொடக்க விழா, தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிலையில், அதில் தி.மு.க மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு, ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, மாநகர மேயர் வசந்தகுமாரி ஆகியோர் தெற்கு ரயில்வே உயர் அலுவலர்கள், பயணிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தி.மு.க மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, மாநகர மேயர் வசந்தகுமாரி ஆகியோர் கொடியசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்தனர்.
முன்னதாக மேடையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, "தாம்பரம் ரயில் நிலையம் சென்னையின் மூன்றாவது பெரிய ரயில் முனையமாக மாற காரணம் டி.ஆர்.பாலு அவர்கள் தான். கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது முதல் இதற்காக டி.ஆர். பாலு முயற்சி செய்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக அவர் எடுத்த தொடர் முயற்சியின் காரணமாகவே இன்று முதல் ஒரு நிமிடம் தேஜஸ் ரயில் நின்று செல்லும் வாய்ப்பு உருவாகி உள்ளது" என்றார்.
ரயில் சேவையை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்கும் முன்பே ரயில்வே வாரிய தலைவரை நேரில் சந்தித்து தேஜஸ் விரைவு ரயிலை தாம்பரத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததையும்,
அதனைத் தொடர்ந்து அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் நாடாளுமன்றத்தில் பலமுறை இந்த கோரிக்கை குறித்து பேசியதையும், ரயில்வே தொடர்பான பல கூட்டங்களில் சுட்டிக்காட்டி பேசியதையும், தற்போதைய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்விடம் நேரில் வலியுறுத்தியதையும் விவரித்தார்.
"கடந்த நான்கு ஆண்டுகளாக இடைவிடாது மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாகவே தாம்பரத்தில் ஒரு நிமிடம் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் மேலும் , இந்த விழாவிற்கு முறையாக மேடை அமைப்பது போன்ற ஏற்பாடுகளை செய்யாமலும், சரியான நேரத்தில் தொடங்காமலும் ரயில்வே அலுவலர்கள் அலட்சியமாக செயல்பட்டு உள்ளதாகவும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!