Tamilnadu

“5000 பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா.. உலக சாதனை படைத்த தமிழ்நாடு அரசு”: அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த 2022 செப்டம்பர் மாதம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி, ஒழுக்கம், விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் சிற்பி திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை சிற்பி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுவரும் சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்கு உட்பட்ட 5000 பள்ளி மாணவர்களை வண்டலுரை அடுத்துள்ள ஊனமெஞ்செரியில் இயங்கி வரும் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியாகத்திற்கு இரயில் மூலம் கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் நிகழ்வை தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து மாலை கல்வி சுற்றுலா சென்று சென்னை திரும்பிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களை வரவேற்று, அவர்களுடன் கலந்துரையாடினர்.

சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டதற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் World Union Records அமைப்பினரின் உலக சாதனை சான்றிதழை, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் வழங்கினர்.

முதலமைச்சர் மாணவ, மாணவிகளின் சிறந்த எதிர்காலத்திற்காக ஆரம்பித்த சிற்பி திட்டத்தின் ஒரு பகுதியாக, சிற்பி திட்டத்தில் உள்ள 5,000 மாணவ, மாணவிகள் சென்னை பெருநகர காவல்துறை சார்பில், எழும்பூரிலிருந்து, இரயில் மூலம் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்திற்கு (Tamilnadu Police Academy), இயற்கையுடன் இணைந்த கல்வி சுற்றுலாவாக (Eco Friendly Educational Tour) அழைத்து செல்லப்பட்டனர்.

அப்போது மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது, “இந்த நிகழ்ச்சிக்கு நான் சிறப்பு விருந்தினர் இல்லை, மாணவர்களாகிய நீங்கள் தான் சிறப்பு விருந்தினர்.

இந்த திட்டம் உங்களுடன் நின்று விடாமல், மாணவர்களாகிய நீங்கள் உங்கள் சகோதர, சகோதரியர் நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் இந்த திட்டத்தை கொண்டு சேர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

இத்திட்ட மூலம் மாணவர்களுக்கு என்னென்ன பயிற்சிகள் அளிக்கப்பட்டது, என்னென்ன தகவல்கள் மாணவர்கள் அறிந்து கொண்டனர் என்பது குறித்து மாணவர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினர்.

Also Read: "இந்தி திணிப்பை நிறுத்தும் வரை நமது போராட்டம் தொடரும்": சூளுரைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!