தமிழ்நாடு

"இந்தி திணிப்பை நிறுத்தும் வரை நமது போராட்டம் தொடரும்": சூளுரைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் எப்போதுமே தோல்வி வந்தது இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"இந்தி திணிப்பை நிறுத்தும் வரை நமது போராட்டம் தொடரும்": சூளுரைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ராயபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி. சேகர், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " உலக வரலாற்றில் மொழிக்காக உயிரை துறந்த இனம் நம்முடைய தமிழினம் தான். மொழியை வெறும் மொழியாக பார்க்காமல் உயிராக, அடையாளமாக பார்த்து போராடியவர்கள் தான் நம் முன்னோர்கள். திராவிட இயக்க கொள்கை உணர்வோடு மொழிக்காக போராடியவர்கள் தான் இந்த மொழிப்போர் தியாகிகள். அத்தகைய தியாக வாழ்வுக்கு சொந்தக்காரர்களான மொழிப்போர் தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கத்தை செலுத்துகின்றேன்.

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை, வீரவணக்க நாளாக ஒவ்வொரு ஆண்டும் கழகக் கொடி பறக்கும் ஒவ்வொரு ஊரிலும் கடைபிடித்து வருகின்றோம். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கழகத்தின் சார்பில் மொழி உணர்வை ஊட்டும் வகையில் இந்த மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

"இந்தி திணிப்பை நிறுத்தும் வரை நமது போராட்டம் தொடரும்": சூளுரைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் வரலாற்றை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்ட வரலாற்றை அறியாமல் இந்தியை திணிக்க முயற்சிக்க நினைக்கும் சங்கிகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றுதான், உயிரைக் கொடுத்தாவது எங்கள் தமிழ் மொழியை காப்போம். ஏனென்றால் நாங்கள் தந்தை பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில், பேராசிரியர் வழியில் வந்தவர்கள்.

முரசொலி பத்திரிகையை தன்னுடைய மூத்த பிள்ளை என்று குறிப்பிடுவார் கலைஞர். அதன் முகப்பில் "வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்" என்று இருக்கும். சாதாரண எளிய மக்களைத் திரட்டி, அவர்களுக்கான அரசியல் உரிமைகளை கற்றுக் கொடுத்து கொட்டும் மழையில் ராயபுரத்தில் உள்ள ராபின்சன் தொடங்கப்பட்ட இயக்கம் நம்முடைய தி.மு.க. நம்முடைய கழகம் தொடங்கப்பட்ட இந்த ராயபுரம் பகுதியில் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதை பெருமையாக நினைக்கிறேன்.

"இந்தி திணிப்பை நிறுத்தும் வரை நமது போராட்டம் தொடரும்": சூளுரைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழுக்கு நம்முடைய கழகம் என்ன செய்தது என வரலாறு தெரியாத சிலர் கேட்கிறார்கள். தமிழ் காக்க உயிரை கொடுத்தது, துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் ஏந்தியது, தடியடி வாங்கியது, தீக்குளித்தது, சிறை சென்றது, சட்டம் இயற்றி செம்மொழி ஆக்கியது என்பது அனைத்துமே நம்முடைய கழக ஆட்சியில் தான். மொழிபோரில் உயிர்நீத்த அனைவரும் நம்முடைய கழகத்தின் தொண்டர்கள்தான். அவர்களின் தியாகத்தால் தான் இந்திய ஒன்றியத்தின் பன்முகத் தன்மை காக்கப்பட்டுள்ளது.

"இந்தி திணிப்பை எந்நாளும் எதிர்ப்போம்" என்பது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்று. அத்தகைய தலைவரை பொதுவாழ்வுக்கு அழைத்து வந்ததே மொழிப்போர் தான். மொழிபோர் தொடங்கியபோது திருவாரூரில் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த 14 வயது சிறுவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

தன்னுடைய 14 வயதில் இருந்து இறுதிக்காலம் வரை இந்தித் திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அன்று முதல் இன்று வரை மொழிப்போர் இன்னும் முடிந்துவிடவில்லை. தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதை சட்டங்களாக, திட்டங்களாக, பாசிசவாதிகளின் கொல்கைகளாக இன்னும் திணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது நிறுத்தப்படும் வரை நாம் எதிர்த்துக் கொண்டு தான் இருப்போம்.

"இந்தி திணிப்பை நிறுத்தும் வரை நமது போராட்டம் தொடரும்": சூளுரைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கடந்த ஆண்டு இந்தியை அலுவல் மொழியாக அரசு அலுவலகங்களில் திணிக்க ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரை அளித்தது. அதை எதிர்த்து இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தவர் நம்முடைய தலைவர் முதலமைச்சர் அவர்கள் தான். ஸ்வச் பாரத் உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்கள், தமிழகத்தில் ஓடும் ரயில்களின் பெயர்கள் போன்றவற்றை யாருக்கும் புரியாத வகையில் இந்தியில் வைத்துள்ளனர். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேசன் என்று திணிக்க முயற்சிக்கும் செயல் மட்டும் தான். தேசபக்தி பற்றி பேசுவார்கள். ஆனால் நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளின் பெருமையை பறைசாற்றும் ஊர்தியை அணிவகுப்பில் சேர்க்காமல் திருப்பி அனுப்பிவார்கள்.

அதேபோல பலகோடி பேர் பேசக்கூடிய தமிழுக்கு ஒதுக்கும் நிதியைவிட 24 ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதம் வளர்ச்சிக்கு ஒதுக்கும் நிதி மிகமிக அதிகம். தமிழ்நாடு என்று மாநிலத்திற்கு பெயர் வர காரணம் தி.மு.க-வும், பேரறிஞர் அண்ணாவும் தான். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கிக் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அரசு அலுவலகங்களில் தமிழ் வாழ்க என எழுத வைத்தார் கலைஞர் அவர்கள். ஆனால் அனைவரையும் தமிழ்நாடு வாழ்க என சொல்ல வைத்துள்ளார் நம்முடைய முதலமைச்சர்.

தமிழ் நூல்களை நாட்டுடமை ஆக்கியது, தமிழ் இணைய மாநாட்டை நடத்தியது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்தது தொடங்கி தமிழ் படைப்பாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததும் நம்முடைய கழக அரசு தான். அண்மையில் சென்னையில் நடந்த முதல் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கூட 350க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் உலகமொழிகளில் மொழிபெயர்க்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

நம்முடைய கழகத்திற்கு தேர்தலில் வெற்றி - தோல்வி பலமுறை வந்திருக்கலாம். ஆனால் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் எப்போதுமே தோல்வி வந்தது இல்லை. விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நம்முடைய கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளிக்க உள்ளார்கள் என்பது உறுதி.

என்னுடைய காரினை எடுத்துக் கொண்டு கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள் என்று சட்டமன்றத்தில் சொன்னேன். ஆனால் எங்கள் கார் எம்.ஜி.ஆர் மாளிகைக்கு தான் செல்லும் என்று சொன்னார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கவில்லை. ஆனா இப்போது இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories