Tamilnadu
சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி.. ஏர்போர்ட்டில் மடக்கி பிடித்த போலிஸ் !
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம், கோஷ்துர்க் போலிஸ் நிலைய பகுதியைச் சேர்ந்தவர், அபூபக்கர் பட்டிலாத்து (38). இவர் மீது கோஷ்துர்க் போலிஸ் நிலையத்தில், கடந்த ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போக்சோ வழக்குப்பதிவாகியது.
இதை அடுத்து கேரளா போலிஸார், அபூபக்கர் பட்டிலாத்து மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த தீவிரமாக தேடினர். ஆனால் இவர் போலிஸிடம் சிக்காமல் கடந்த ஓராண்டாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததோடு, வெளிநாட்டிற்கும் தப்பி சென்று விட்டார் என்ற தகவல் போலிஸூக்கு கிடைத்தது.
இதை அடுத்து கேரள மாநிலம், காசர்கோடு மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு, அபூபக்கர் பட்டிலாத்துவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்கள் எல்.ஓ.சி போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்து, பயணிகளை அனுப்பி கொண்டு இருந்தனர். இதே விமானத்தில் கேரள மாநில போபோலிஸாரால், போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளியான, அபூபக்கர் பட்டிலாத்துவும் மலேசியாவில் இருந்து சென்னை வந்தார்.
குடியுரிமை அதிகாரிகள் அபூபக்கர் பட்டிலாத்து பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, கம்ப்யூட்டரில் இவர் கேரள மாநில போலிஸால், போக்சோ வழக்கில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று காட்டியது. இதை அடுத்த குடியுரிமை அதிகாரிகள் பயணி அபூபக்கர் பட்டிலாத்துவை வெளியில் விடாமல் மடக்கி பிடித்து, ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.
அதோடு சென்னை விமான நிலைய போலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து, கேரள பயணியை அடைத்து வைத்துள்ள அறைக்கு, போலிஸ் காவலும் ஏற்பாடு செய்தனர். மேலும் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட போலிஸ் சூப்பிரண்டுக்கு, போச்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த, தலைமறைவு குற்றவாளி, மலேசியாவில் இருந்து விமானத்தில் வந்த போது, சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ளார், இந்த தகவலையும் அவசரமாக அனுப்பினர்.
இதை எடுத்து காசர்கோடு மாவட்ட தனிப்படை போலிஸார், இன்று அதிகாலை, சென்னை விமான நிலையத்திற்கு வந்து, குடியுரிமை அலுவலகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தலைமறைவு குற்றவாளி, அபூபக்கர் பட்டிலாத்துவை கைது செய்து, பலத்த பாதுகாப்புடன், கேரளாவுக்கு கொண்டு சென்றனர்.
Also Read
-
ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு கட்டணம் : தவெக அமைச்சர் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லையா? - DMK IT WING!
-
‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை ஏற்க Cheap CM-க்கு மனமில்லை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
“உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது!” : த.வெ.க அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எச்சரிக்கை!
-
“தமிழ்நிலத்தின் தன்மானம் காத்த தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
உணவுப் பொருட்களின் விலை உயர்வில் தமிழ்நாடு முதலிடம்! - தவெக-வின் தோல்வி நிர்வாகத்திற்கு முரசொலி கண்டனம்!