Tamilnadu
கலைகட்ட தொடங்கிய பொங்கல் விழா.. 3 மணி நேரத்தில் ரூ.5 கோடிக்கு விற்பனையான ஆடுகள்!
தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் விழா கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதனால் வெளியூர்களில் இருப்போர் தங்களது சொந்த ஊரில் பொங்கல் கொண்டாட நேற்றிலிருந்தே கிளம்பத் தொடங்கி விட்டனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெறும் பழமைவாய்ந்த வெள்ளிக்கிழமை வார சந்தைக்குத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் இன்று வந்திருந்தனர்.
இன்று அதிகாலை 3 மணி முதல் வேலூர், கடலூர், விழுப்புரம் காஞ்சிபுரம் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஆடு வளர்ப்பவர்கள் செம்மரி ஆடுகளையும் வெள்ளாடுகளையும் வாகனத்தில் செஞ்சி சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.
இதேபோல் தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து, தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும் செஞ்சி சந்தைக்கு வருகை தந்து ஆடுகளை வாங்கினர்.
ஒரு ஆட்டின் விலை சுமார் ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் 3 மணி நேரத்தில் ரூ. 5 கோடிக்கு விற்பனையானது.
செஞ்சி பகுதி மேய்ச்சலுக்காக மலையும் காடுகளும் சார்ந்த பகுதி என்பதால் இங்கு வளர்க்கப்படும் ஆடுகளின் கறி சுவையாக இருக்கும் என்பதால் வியாபாரிகள் அதிக அளவில் வருகை தந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!